வியாழன், 27 செப்டம்பர், 2012

உலகில் மிக சிறந்தது ஞான தானம் தான்!







தவம் செய்வோம், குருவே கதி என்று இருப்போம். யாராக இருந்தாலும் சரி, குருவின் பாதத்தில் சரண் அடைந்து , கொடுத்த உபதேச தீக்ஷை படி ஒழுங்கா தவம் செய்தால் எல்லாமே நன்றாக இருக்கும். 

எல்லாம் குரு பார்த்து கொள்வார். சிறுவயதில் எப்படி அப்பா அம்மா தான் எல்லாம் பார்த்தார்கள்? நமக்கு கேட்க தெரியாது ,பேச தெரியாது அப்பா அம்மா தான் பாலூட்டி சீராட்டி படிக்க வைத்து, ஆள் ஆக்கி வளர்த்து எல்லாம் செய்தார்கள். 

அதை விட 1000 மடங்கு மேல் குரு பார்த்து கொள்வார்.  அதை விட 1000 மடங்கு மேல் இறைவன் நமக்கு அருள் புரிவார். 

குரு அருள் பெற்று தான் இறைவன் அருள் பெறனும். குரு அருள் இன்றி திரு அருள் உவாது. வள்ளல் பெருமான் சொன்னது  தகுந்த ஆச்சர்யான் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்க பெற்று கொள்வது நலம்.  அது தான் தீக்ஷை. 

அப்படி தீக்ஷை பெற்றால் தான் இந்த பிறவியில் அந்த மோட்சம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

தவம் செய்ய வேண்டும். தவம் செய்யாமல் உலகில் எதுவும் கிடைக்காது.  தவம் தான் முக்கியம். எனக்கு சம்பளம் மட்டும் வேண்டும் என்றால்??  வேலை செய்யாமல் இருந்தால் எப்படி? அதிக படியான வேலை செய்யுங்கள்.. உழைப்புக்கு தான் பலன். அது போலே தவம் செய்தால் தான் பலன். தவம் செய்தால் மட்டுமே முன்னேற்றம்.  வேறு எதனாலும் முன்னேற்றம் கிடைக்காது.

படித்தவன், ஜனாதிபதி எல்லோரும் சாமியார் காலில் விழுகிறான்!  கோடீஸ்வரன் எல்லோரும் சாமியார் காலில் விழுகிறான்.  சாமியார் யாரு பிச்சை காரன் தானே? உலக கோடிஸ்வரன் எல்லாம் சாமியார் காலில் விழுறான்?  அப்போ பணம் பெருசா? ப்ரைம் மினிஸ்டர், ஜனாதிபதி சாமியார் காலில் விழுறாங்க, அப்போ பதவி பெரியாதா?  

அவர் தெரிந்து உணர்ந்த அந்த ஆன்மீக நிலை ஆன்மீக உணர்வு , அது தான் எல்லோரும் அறிந்து கொள்ள கூடியது.  இறைவன் எல்லோரிடமும் ஒரே மாதிரி தான் இருக்கிறான். ஒருவரிடம் அதிகமாக, ஒருவரிடம் குறைத்து இல்லை.  இறைவன் அனைவருக்கும் சமம்.  எல்லோரும் ஒண்ணுதான். நாம் ஆன்மாக்கள். எந்த ஒரு பாகுபாடு இல்லை. அவுங்க அவுங்க கர்ம படி இங்கு வந்து இருக்கோம். கர்மத்தை எல்லாம் தீர்த்து விடலாம், தவம்  செய்தால்!!!

அதற்க்கு வள்ளல் பெருமான் துணை இருப்பார். உள்ளும் புறமுமாய் அவன்  இருக்க எனக்கு என்ன கவலை. நாம்  அப்படி இருக்கணும். உங்க கூடவே இருக்கிறார். எப்போ தீக்ஷை பெற்று கொண்டீர்களோ அந்த செகண்ட் இல் இருந்து வள்ளல் பெருமான் உங்களுடன் உள்ளார். அதை நீங்கள் நல்ல முறையில் பயன் படுத்தி கொள்ளுங்கள். அவர் உதவி செய்ய தயார், நீங்க 
பயன் படுத்தி கொள்ளுங்க. வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். தவம் செய்தால் போதும். எல்லோருக்கும் இந்த ஞானத்தை சொல்லி கொடுத்தால் போதும். 

இப்போ அவர் அருள் பெறனும்,  ஒரு ஈசி ஆனா வழி என்ன என்றால் அவர் விருப்பமான ஒரு காரியத்தை நாம் செய்தால் போதும். அவர் விருப்பமான காரியம் என்ன?  பாட்டு படிப்பது பூஜை பண்ணுவது இல்லை, அவர் விருப்ப மான காரியம் அவர் விருப்ப பட்ட அந்த மரணமிலா பெருவாழ்வை நாலு பேருக்கு நாம் சொல்லி கொடுப்பது தான். ஞான தானம் தான் !!! உலகில் மிக சிறந்தது ஞான தானம் தான்! நாலு பேருக்கு இந்த ஞானத்தை சொல்லி தரனும் . எவ்வளவு பேருக்கு சொல்லி தர முடியுமோ சொல்லி கொடுங்க.  அது தான் புண்ணியம்!! வேறு என்ன தானம் பண்ணினாலும் பிரயோஜனம் இல்லை. உலகத்தையே கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லை 

-ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா - 2010 குரு பூஜை அன்று அருளியது!! 
-----
குருவை சந்தித்து உபதேசம் தீட்சை பெருக!
ஞான தவம் செய்யவும். 

ஞான தானம் செய்யவும்!
Contact : http://www.vallalyaar.com/contact-us/


திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

2 கருத்துகள்:

Popular Posts