புதன், 25 ஏப்ரல், 2012

சன்மார்க்கிகளே ஒரு வேண்டுகோள் !



மாதந்தோறும் பூசம் கொண்டாடும் நீவீர்!
தை பூசம் விழா கொண்டாடுகிறீர்! மகிழ்ச்சி!
வைகாசி -11  தர்மசாலை விழா கொண்டாடி
அன்னதானம் கொடுக்கின்றீர்! மிக்க மகிழ்ச்சி!

 புரட்டாசி சித்திரையை வள்ளலார் பிறந்தநாளை
குரு பூஜையாக கொண்டாடாமல் விட்டீரே ஏன்?
இனியாவது
புரட்டாசி சித்திரை குரு பூஜை கொண்டாடுக!!
  மெய் அன்பர்களே
அன்னதானம் செய்யும் மனித நேயம் மிக்கவர்களே!
ஞானதானம் செய்து ஆன்மநேய ஒருமைப்பாடு கொள்க!

             உலககுரு - ஞானசற்குரு
            திருவருட் பிரகாச வள்ளலாருக்கு
       நாம் காட்டும் நன்றி
         நாம் ஆன்ம நேய ஒருமைப்பாடு உடையவர்
ஆவதுதான்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்.
தங்கஜோதி ஞானசபை
கன்னியாகுமரி 

4 கருத்துகள்:

  1. வள்ளலார் பிறந்த தினம் ஆங்கில தேதியில் கொண்டாட படுகிறது.. அப்படி இல்லாமல் புரட்டாசி சித்திரை கொண்டாட வேண்டும். இதுவே குருவின் வேண்டுகோள்.

    பதிலளிநீக்கு
  2. ஆன்ம நேய அன்புடையீர் வணக்கம் ,வள்ளலார் பிறந்த நாளை ஆங்கில வருடம் கொண்டாடுவது சரி இல்லை என்றும் தமிழ் மாதம் புரட்டாசி ,சித்திரையில் கொண்டாட வேண்டும் சொல்கிறீர்கள் .உங்கள் விருப்பம் மகிழ்ச்சி தரக்கூடியதுதான் ,இருப்பினும் .வள்ளலார் பிறப்பு இறப்பு அற்றவர் .மரணத்தை வென்றவர் ,எங்கும் நிறைந்து இருப்பவர் ,இறைவன் நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டவர் ,அவருக்கு காலம் நேரம் ,மாதம் ஆண்டுகள் கிடையாது ,அவரே சொல்லுவார் .

    காலம் கடந்த கடவுளைக் காண்பதற்கு காலம் கருதுவதேன்,என்றும் ,அடங்கு நாள் இல்லாத அமர்ந்தானைக் காண்பதற்கு தொடங்கு நாள் நல்லதன்ரோ !என்பார் .வள்ளலாரை வழிபடுவதற்கும்.போற்றுதற்கும் சமயவாதிகள் போல் செய்து வருகிறார்கள் ,அதில் வள்ளலாருக்கு உடன்பாடு இருக்காது.நாம் இறைவனைக் கொண்டாடுவதற்கு காலம் நேரம் கருத வேண்டிய அவசியம் இல்லை எனக் கருதுகின்றேன்.

    எந்நேரமும் இறை சிந்தனையுடனும் உயிர் இரக்கமானஜீவ காருண்யத்தை கடைப் பிடிப்பதுதான் சன்மார்க்கிகளின் கடமையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.இதுவே நாம் இறைவனுக்கு செய்யும் வழிபாடாகும் .இறைவன் ஒரு நொடி நம்மை மறந்தால் நம் நிலை எப்படியாகும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும் .நம்மை இடைவிடாது இயக்கிக் கொண்டு இறைவனை நாம் இடைவிடாது கருத்தில் கொள்ளவேண்டும் என்பது இச்சிறுவனின் வேண்டு கோளாகும்.

    அன்புடன் ஆண்மநேயன் கதிர்வேலு. .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா ,
      தாங்கள் சாதாரணமாக கூறி விடலாம் .தாங்கள் கூறிய கருத்தில் ,ஒரு பெரிய உண்மை உள்ளது .
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. இறைவன் ஒரு நொடி நம்மை மறந்தால் நம் நிலை எப்படியாகும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும் .நம்மை இடைவிடாது இயக்கிக் கொண்டு இறைவனை நாம் இடைவிடாது கருத்தில் கொள்ளவேண்டும்
    அய்யா ,
    தாங்கள் சாதாரணமாக கூறி விடலாம் .தாங்கள் கூறிய கருத்தில் ,ஒரு பெரிய உண்மை உள்ளது .
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

Popular Posts