செவ்வாய், 3 ஏப்ரல், 2012

வினையறுக்க வந்ததே இப்பிறவி


மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற நம் பஞ்சேந்திரியங்களும் நம் உயிர் ஆற்றலினால் செயல்படுகிறது.

உணர்தல் பேசுதல் பார்த்தல் நுகர்தல் கேட்டல் அனைத்தும் ஆத்மாவின் செயலால் - உயிர் ஆற்றலால் தான் ஐம் புலன்களும் ஆத்மஸ்தானத்தில் - உயிர் இருக்கும் இடம் - ஓளி துலங்குமிடத்தில ஒடுங்கி விடுகிறது.

ஐம்புலன்களால் மனம் எண்ணி, புத்திக்கு அனுப்பி, சித்தத்தில் உறுதிப்பட்டு அகங்காரம் செயல்படுகிறது. ஒவ்வொரு காரியமும் இப்படியே நடக்கிறது.

எச்செயலும் ஏதாவது கர்மத்தை - வினையை உண்டாக்கி விடும்.  வினைகள் தீர்க்க படவேண்டும். இது தீரத்தான் தியானம் தவம் தேவை.

வினை இருக்கும் வரை பிறப்புண்டு, வினை இல்லமால் போனால் தான் பிறவி இல்லாது போகும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.  "வினை போகமே ஒரு தேகம் கண்டாய் " அவரவர் வினைகளுக்கேற்ப  பிறவி
அமைகிறது. வினை முழுவதும் தீர வேண்டும். அதற்குதான் தவம். வினையறுக்க வந்ததே இப்பிறவி.

வினைகள் பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம் என மூன்று வகை படும்.

பிறப்போடு வருவது பிராரத்துவம், விதிக்கப்பட்டு வந்து பிறக்கிறோம். நல்லோரை சார்ந்து ஒழுக்கமாக  வாழ்ந்து சத்தியமாக நேர்மையாக வாழ்ந்தால் இறைவன் அருளால் சற்குரு கிடைக்கும். குருவே சரணம்
என்று இருந்தால் இப்போது நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் கண்ணனிடம் நம் கண்மணி ஒளியிடம் சமர்பித்துவிடவேண்டும். கண் அவன் கணவன். ஆத்மாக்களுக்கு கணவன் பரமாத்மாதான். கண்ணன் நம்
கண்மணியில் உள்ள ஒளி. அதிலே சரணடைந்து விட்டால் நம் செயல்களை கண்ணன் திருவடியில் கண்மணி ஒளியில் விட்டால் நமக்கு ஆகான்மியம் இல்லை.

குருவை பெற்று, கண் திறக்கப் பெற்று, தவம் செய்யச் செய்ய இனி ஆகான்மியம் இல்லை! சாதனையில் இறங்கும் சாதகனின் பிராரப்தம் குருவருளால் தீரும்! ஆகான்மியம் இல்லாது போய் - பிராரப்தம் கரைஞ்சு போய் - சஞ்சிதமும் ஒவ்வொன்றாய் வெளிப்பட்டு தீரும். "தலைக்கு வரும் துன்பம் தலைபாகையோடு போகும்" குருவே கூட இருந்து காப்பாற்றுவார்.

வினை தீரத்தீர இறைவனை நெருங்கி விடுவோம்.

பஞ்சமா பாதகம் செய்பவனாயினும் குருவால் உபதேசம் பெற்று சாதனை செய்தால் உத்தமனாகலாம். வால்மீகி மகரிஷி, அருணகிரி நாதர் இன்னும் பலர் உதாரணத்திற்கு இருக்கிறார்கள். கண்ணன் திருவடியில்
சரணானாலே நமக்கு வினையில்லை என்றாகும்.

"நாம் செய்பவனல்ல சாட்சி மாத்திரமே"  என வாழ்ந்தால் வினைகளிடமிருந்து விடுதலை! பிறவி கடலில்
நீந்தி கரையேறாலாம்.

நம் கண்மணி ஒளியிலே நாட்டம் வைத்து எந்த காரியம் செய்தாலும் அதனின்று எந்த வினையும் நமக்கு வாராது.


ஞான சற்குரு சிவசெல்வராஜ்
வள்ளல் யார்

5 கருத்துகள்:

  1. தாங்கள் பதிவு செய்த அத்தனை கருத்துக்களும் முத்துக்கள் .தங்களின் பதிவுகளை படிக்கும் பேறு கிடைத்தது
    அறிந்து மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தெளிவான விளக்கம்.
    தெளிந்தவர் பேச்சு தெளிவாக உள்ளது
    சடங்குகளில் சிக்கி கொண்ட இந்த உலகம்
    இந்த உண்மையை புரிந்து கொள்ளும் நாள் எந்நாளோ?
    உண்மையறியாமல் உளறுபவர்களின் காலடியில்தான்
    மயங்கி கிடக்கிறது மக்கள் கூட்டம்
    என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  3. பிணங்குகின்றது ஏதடா? பிரக்ஞைகெட்ட மூடரே?
    பிணங்கிலாத பேரொளி பிராணனை அறிகிலீர்.
    பிணங்கும்ஓர் இருவினைப் பிணக்கறுக்க வல்லீரேல்!
    பிணங்கிலாத பெரியஇன்பம் பெற்றிருக்க லாகுமே!

    பதிலளிநீக்கு
  4. fate is when u born that also come with u ,In this birth how do u know when will the fate completed and how could u complete or erase the fate is it possible

    பதிலளிநீக்கு
  5. Summa iru - is the davam one need to clear the karma(fate). If you mind starts working then karma will add.

    Get deekshai from guru, SUMMA IRUNGA(DO NOTHING).

    பதிலளிநீக்கு

Popular Posts