செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

வினை கழிந்து தன்னை உணர வழி ?


"வெவ்வினைக் கீடான காயம் இது மாயம்"

நாம் செய்த பாவ புண்ணிய வினைகளுக்கு தகுந்தபடி நமக்கு உடல் தந்து இறைவன் நம்மை படைத்து அனுப்பினார் உலகத்தில்! இந்த உடல் வினைக்கு தக்கபடி செயல்படுவதால் அனைத்தும் மாயையே! வினைப்பயனே!

இப்படியே போனால் அழிந்து விடும் உடல்! அழித்து விடுவர் உடலை! சுட்டோ! இட்டோ! அழியுடம்பை அழியாமை ஆக்கும் வகையே, கண்மணி ஒளியை கண்டு உணர்ந்து தவம் செய்வதாகும்! ஒப்பற்ற மேலான இந்த தவம் சும்மா இருப்பதேயாகும்!

"வினை போகமே ஒரு தேகங்கண்டாய்"  என ஞானி ஒருவர் கூற்றும் இப்பொருளே! தேகம் அழியாமலிருக்க வேண்டுமானால் வினை இல்லாமலாக வேண்டும்!

அதற்க்கு தான் ஞான சாதனை!- தவம்!- சும்மா இருக்கவேண்டும்! கண்மணி ஒளியை குருவிடம் தீட்சை பெற்று உணர்ந்து தவம் செய்யச்செய்ய ஒளிபெருகி சூட்சுமம் நிலையிலிருக்கும் வினையாகிய திரை உருகி கரைந்து விடும்!

வினை தீரத்தீர ஒளி மிஞ்சும்! மிஞ்சுகின்ற ஒளி உடல் முழுவதும் பரவும்! ஊன உடலே ஒளி உடல் ஆகும்! பிறவி கிடையாது! வினை இல்லையெனில் பிறவி இல்லை!

வினைகள் மூன்று! பிராரத்துவம், ஆகாமியம், சஞ்சிதம்.

குரு தீட்சை பெற்று தவம் செய்யும் சாதகன் பிராரத்துவகர்மம் முதலில்

கொஞ்சம் கொஞ்சமாக தீரும்! குரு தீட்சை பெற்ற சாதகன் உத்தமனாக
வாழ்வதால் ஆகான்மிய கர்மம் தோன்றாது! தோன்றினால் குரு தடுத்து
காத்தருள்வார்! "ஆகான்மியம் அவன் ஆசானையே சேரும் "! தொடர்ந்து

தவம் செய்பவன் கண் ஒளி பெருகப் பெருக ஞானக்கனல் பெருகக் பெருக

சஞ்சித கர்மமும் கொஞ்சங் கொஞ்சமாக வந்துதீரும்! நைந்து பியந்து

போனாலும் நாதன் கை விடமாட்டான்! நான் மறைதீர்ப்பு! கர்மம் தொலையவே காரியம் செய்யணும்! சிவகாரியம்! - மோனம் கூடி சும்மா இருக்கும் நிலையே சிவகாரியம்! அந்த ஒளியை சரணடைந்தால் பேரின்பமே எந்நாளும்! நாமும் வாழலாம்! எல்லோரையும் வாழ வைக்கலாம்! குருவாக உயர்ந்து குவலயம் காக்கலாம்!

- ஞான சற்குரு சிவசெல்வராஜ்

----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

1 கருத்து:

  1. அன்புள்ள அய்யா அவர்களுக்கு ,
    தங்களின் தெளிவான பதிவிற்கு மிக்க நன்றி .மேலும் ,எளிமையாகவும் ,விளக்கமாகவும் இருந்ததுக்கான பாராட்டுக்க

    பதிலளிநீக்கு

Popular Posts