சனி, 17 செப்டம்பர், 2011

சன்மார்க்க கொள்கை

சன்மார்க்க கொள்கை (இராமலிங்க வள்ளலார்)

சர்வசித்தியை உடைய தனி தலைமை பதியாகிய ஆண்டவரை
வேண்டித் தபசு செய்து சிருஷ்டிக்குஞ் சித்தியைப் பெற்றுகொண்டவன்
பிரமன் ; சிருஷ்டி, திதி ஆகிய சித்தியைப் பெற்று கொண்டவன் விஷ்ணு;
சிருஷ்டி, திதி , சங்காரம் ஆகிய சித்தியைப் பெற்று கொண்டவன் ருத்திரன்.

இவர்கள் ஏற்படுத்திய சமய மார்கங்களை அனுடிக்கின்றவர்கள் இவர்களை
அந்தந்த
சமயங்களுக்குத் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்து வந்தார்கள்,

இம் மூர்த்திகளுடைய சித்திகள் சர்வ சித்தி யையுடைய கடவுள் சித்தியின்
இலேசங்கள்,
அதில் ஏகதேசம் கூட அல்ல. ஆகையால், இவர்கள் அந்த
சர்வ சித்தியையுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள் ; கோடி கோடிப் பங்கு
தாழ்ந்த தரத்தில் இருகின்றார்கள், ஆகையால் சமய தெய்வங்களை
வழிபாடு செய்து, அந்த சமய தெய்வங்களிடம் பெற்று கொண்ட
அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து மேலேற
வேண்டிய படிகள் எல்லாம் ஏறிப் பூரண சித்தி அடையாமல்
தடைப்பட்டு நிற்றல்போல நில்லாமல்,

சர்வ சித்தியை உடைய கடவுள் ஒருவர் உண்டென்றும் அவரை
உண்மை அன்பால் வழிபாடு
செய்து பூரண சித்தியைப் பெறவேண்டும்
என்றும் கொள்ள வேண்டுவது சன்மார்க்க சங்கத்தவர்களுடைய கொள்கை.

இதை ஆண்டவர் தெரிவித்தார்.

சுத்த சன்மார்க்கதின் முடிபு

சாகாத கல்வியைத் தெரிவிப்பதே அன்றி வேறில்லை . சாகிறவன் சன்மார்க
நிலையை பெற்றவனல்ல. சாகாதவனே சன்மார்க்கி
.



2 கருத்துகள்:

  1. வள்ளலார் சொல்லியது---இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழிக்காதிர்கள் -- .சன்மார்க்க அன்பர்கள் சொல்லுவதிலே காலத்தை கழித்துக் கொண்டு உள்ளார்கள் .சொல்லுவதுபோல் வாழ்ந்து காட்ட வேண்டும். இன்னும் சாதாரண புறச் சாதி சமய மத சின்னங்களையே விட முடியவில்லை-- புறப் பற்றையே விடமுடியவில்லை அகப பற்றை எப்போது விடுவது .எப்போது சுத்த சன்மார்க்கி என்ற பெயர் இறைவனிடம் பெறுவது ,சாகாத கல்வி எப்போது கற்பது ,அருள் எப்போது பெறுவது,மரணத்தை எப்போது வெல்வது .மரணத்தை வெல்வது என்பது சாதாரண காரியமா ?ஒன்றையும் விடாமல் பிடித்துக் கொண்டு மரணத்தை வெல்வேன் என்றால் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதாகும்,பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அருள் அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே .என்று சொல்கிறார் .இந்த நிலைக்கு தன்னை யார் தயார்ப் படுத்திக் கொள்கிறார்களோ அவர்கள் மனிதர்கள் யாகும் .அதற்கு மேல் அவர்கள் எண்ணம் சொல் செயல் ஒழுக்கம் இவைகள் யாவும் முழுமை பெற்று இருக்கிறார்களா என்பதை கடவுள் அறிந்து அருள் தந்தால்-அருளைக் காப்பாற்று வார்களா இல்லை அதை வைத்து சித்து விளையாடுவார்களா என்பதைக் கவனித்துதான் அருளைத் தருவார். அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்பதை அறிந்து புரிந்து கொள்ளவேண்டும்.நாம் எந்த தகுதியில் இருக்கிறோம் என்பதை நாமே அறிந்து கொண்டு மேலே செல்ல வேண்டும் .ஏதும் தெரியாமல் மூடமாக இருந்துக் கொண்டு இருக்கக் கூடாது .சாப்பாடு போட்டுவிட்டால் போதும் மரணத்தை வென்று விடலாம் என்று சன்மார்க்க அன்பர்கள் அதே பணியை செய்து கொண்டு உள்ளார்கள் .ஆனால் அதுதான் சன்மார்க்கத்தின் முதற்படியாகும் அதற்கு மேல் நிறைய படிகள் இருக்கின்றன.அதை அறிந்து முயற்ச்சி செய்ய வேண்டும் .அதுவும் பெரு முயற்ச்சி செய்ய வேண்டும் உதாரணத்திற்கு --வள்ளலார் எப்படி வாழ்ந்தாரோ அப்படி நாம் வாழ வேண்டும் .அப்போதுதான் இறைவன் நம்மைக் கவனிப்பார்.அதற்கு முன் நாம் மனிதனாக வாழ வேண்டும். மனிதனாகவே நாம் யாரும் வாழ வில்லை ,மனித உருவத்தில் உள்ள மிருகங்களாக வாழ்ந்து கொண்டு உள்ளோம்..மனித தகுதி என்ன என்பதை வள்ளலார் திரு அருட்பாவில் தெளிவாக எழுதி வைத்துள்ளார் .படித்து பயன் பெறுவோம். முதலில் மனிதனாக வாழ்வோம் மனிதனாக வாழ்பவர்களுக்குத்தான் கடவுள் அருள் கிடைக்கும் .இந்த உலகில் யாரும் மனிதத் தன்மையோடு வாழ வில்லை வாழ முயற்ச்சி செய்கிறார்கள் .முயற்ச்சி வெற்றிபெற அருட்பெரும் ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்.

    ஆன்மநேயன் ;--கதிர்வேலு .

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் .மிகவும் நல்ல கருத்துக்களை தந்துள்ளமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

Popular Posts