திங்கள், 5 ஆகஸ்ட், 2024

 🔥திருவடிப் புகழ்ச்சி - திருஅருட்பா🔥 


பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம் 

   பதித்துவ பரோபரீணம்

பஞ்சகிர்த்திய சுத்த கர்த்தத்துவம் தற் 

   பரம் சிதம்பர விலாசம் 

பகர்சுபாவம் புனிதம் அதுலம் அதுலிதமம் 

   பராஅம்பர நிராலம்பனம் 

பரவு சாக்ஷாத்கார நிர் அவயவம் கற் 

   பனாதீத நிருவி காரம்


பரிபவ விமோசனம் - பரிபவம் + விமோசனம் அவரவர் பரிபக்குவத்திற்கு, வினைக்குதக்கபடி வாழ்வுக்கு தக்கபடி அமையும் நிலையிலின்று மீட்டு விமோசனம் உயர்வு கொடுப்பது நம் கண்மணியே ! 

குணரகிதம் - குணங்களின் தொடர்பு அற்றது ! 

விசுவம் - உலகம் ! 

பதித்துவம் - பதியாய் விளங்கும் தன்மை பெற்றது ! 

பரோபரீணம் - எண்ணிய உடனேயே உலகெங்கும் செல்லும் ஆற்றல் பெற்றது ! 

பஞ்சகிர்த்தியம் -படைத்தல் காத்தல் மறைத்தல் அருளல் அழித்தல் என்று இறைவன் தொழில் ஐந்து ! 

சுத்தகர்த் தத்துவம் - அனைத்தினுக்கும் கர்த்தாவான சுத்தபரம்பொருள் ! 

தற்பரம் - பரம்பொருளைவிட மேலானது இல்லை ! 

சிதம்பர விலாசம் - சின்ன இடத்தில் மேடையில் துலங்கி விளங்குவது ! வெளியிலே ஒளி !

பகர்சுபாவம் - தானாக சுயமாக தோன்றி துலங்கும் ஒளி எல்லோரும் சொல்வது ! 

புனிதம் - பரிசுத்தம் - தூய்மை ! 

அதுலம் அதுலிதம் - அது - பரம்பொருள் எதோடும் ஒட்டாதது. அது எதற்கும் ஒப்புமாகாது ! 

அம்பராம்பரம் - ஆகாயத்தையும் தன்னுள் கொண்ட அகண்டவெளி ! 

நிராலம்பனம் - நிர் + ஆலம்பனம் எவ்வித பற்றும் ஆதாரமும் இல்லாதது ஆனால் எல்லாவற்றிற்கும் ஆதாரமானது ! 

பரவுசாக்ஷாத்காரம் - சும்மா இருந்தால் சாக்ஷாத் அந்த பரம் பொருளையே நம்முன் எங்குமாய் பரந்து இருப்பதை காணலாம் ! 

நிர்அவயவம் - நம்போல் உருவம் அவயவங்கள் இல்லாதது ! ஒளிக்காட்சி ! 

கற்பனாதீதம் - கற்பனைக்கு எட்டாதது ! 

நிருவிகாரம் - விருப்புவெருப்பு அற்றவன் விகாரம் ஆசை அற்றவன் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !! 

 - ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா 

 www.vallalyaar.com

Popular Posts