செவ்வாய், 28 நவம்பர், 2023

🔥அம்மையப்பனை காண வேண்டாமா ?🔥



நூல் : சநாதனதர்மம் 30

🔥அம்மையப்பனை காண வேண்டாமா ?🔥

நாம் எல்லோரும் - உலகமக்களாகிய 700 கோடி மக்களாகிய நாம் அனைவரும் அந்த ஒரே அம்மையப்பனின் பிள்ளைகளே !

அப்படியாயின் உலகமக்களாகிய நாம், 700 கோடி பேர்களும் சகோதரசகோதரிகள் தானே !?

பேரொளியாகிய அருட்பெருஞ்ஜோதியாகிய நம் அம்மையப்பனாகிய அந்த இறைவன்தான் சின்ன ஒளியாக நம் அனைவரின் கண்மணியிலும் ஒளிர்கிறார் !? எவ்வித வித்தியாசமுமின்றியே.

நம் அம்மையப்பனை நாம் காண வேண்டாமா ? உணர வேண்டாமா ?!

எல்லாம் வல்ல இறைவன், எங்கும் நிறைந்த இறைவன், அணுவுக்குள்ளும் அணுவாக இருப்பவன் நம் உடலில் இல்லாமலிருப்பானா ?

நம் உடலில் கண்ணில் மணியாக ஒளியாக இருக்கிறான். இந்த உலகிலுள்ள எல்லா ஞானிகளும் இதைத்தான் கூறியிருக்கிறார்கள்.

கண்தான் வெட்டாத சக்கரம் !
கண்தான் பேசாதமந்திரம் !
கண்தான் வேறொருவர்க்கும் எட்டாத புஷ்பம் !
கண்தான் கட்டாத லிங்கம் !

சிவலிங்கத்தை மேலிருந்து பார்த்தால் 3 வட்டம்தானே தெரிகிறது. 
கண் அதுபோலத்தானே உள்ளது.

கண்தான் கரும்பு -கரும் - பூ !

உலகில் எவ்வளவோ கலர்களில் பூக்கள் இருக்கின்றனவே, 
கருப்பு பூ உண்டா ? கண்தான் கருப்பு பூ !

அண்டம்போல் அழகியது கண் !

அண்டம் என்றால் உலகம் - பூமி நாமிருக்கும் பூமி உருண்டையாக 
இருப்பது போலவே நம் கண்மணி உள்ளது !

பூமி தன்னைத் தானே சுற்றுவதுபோல கண்மணியும் சுற்றுகிறது !

பூமி சுழல்வதற்கு ஆதாரம் அதன் உள் மத்தியில் கனன்று கொண்டிருக்கும் நெருப்புதான்.

கண்மணியும் அதன் மத்தியில் உள்ள, ஊசிமுனை துவாரத்தினுள் உள்ள சிறு ஜோதியால்தான் சுழல்கிறது !

பூமி எப்படி அந்தரத்தில் உள்ளதோ அதுபோலவே கண்மணியும் கண்ணின் கரு விழிக்குள் பிராண நீரில் மிதந்து கொண்டுதான் இருக்கிறது !


" பிராண நீரானதில் உருண்டு திரண்டதை கண்டு அறிந்திடு நீ "

என சித்தர் உரைத்தது கண்மணியைத்தான் !


" காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான் காண்"

என திருநாவுக்கரசர் உரைத்ததை உணர்வீர்.

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

வள்ளல்பெருமான் திருவடி போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts