இது என்ன ?
 "வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில் குயில் ஆச்சுதடி" 
இதையும் வடலூர் வள்ளலாரே பாடினார் ! 
நாம் தவம் செய்யும் போது 
பலவித வர்ணங்களில் மயிலின் தோகைபோல் ஒளிக்காட்சி காணும் ! அதன்மேல் செஞ்சுடர் ஒளிகாணும் ! 
 மயிலின் மேல் முருகன் என்றனர் பக்தர்கள். 
பலநிறவர்ண ஒளி காட்சிக்கு பின் செஞ்சடர் காட்சி ! இது ஞானிகள் !  செஞ்சுடர் உதயமாகும் போது தசவித நாதமும் கேட்கும் இதுவே ஞான சாதனை அனுபவம்.  🔥ஒளியும் ஒலியும் !🔥 
 பக்தியில் கோவிலில் சாமிக்கு தீபாராதனை கற்பூர ஒளி காட்டும் போது 
மேளதாளம் சங்கொலி மணியோசை ஒலிக்கச் செய்வார்கள் ! 
ஞான சாதனை செய்யும்போது, உனக்குள் கற்பூர ஜோதி காண்கையில் 
நாதத் தொனி கேட்கும் என உணர்த்தவே !  கோவில் ஞானப் பள்ளிக்கூடமே ! ஒழுங்காக கோவிலுக்கு போ ! 
பக்தி செய் ! ஒவ்வொன்றும் ஏன் எதற்கு என சிந்தி ! ஞானம் விளங்கும் ! 
அதனால் தான் ஔவை யார் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்றார்கள். 
 👁️🔥👁️  "என்னிரு கண்ணே, கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய்" 
 என்கிறார் திருநாவுக்கரசர் ! 👁️🔥👁️ 
🔴 திருப்பாவை என்று பாவையான பாப்பாவான கண்மணியில் திருவாகிய 
இறைவன் துலங்குவதையே கூறுகிறாள் ஆண்டாள் ! 
🔴 திருவெம்பாவை என்று பாவையான பாப்பாவான கண்மணியில் திருவாகிய இறைவன் 
துலங்குவதையும் அது என் பாவை என் பாவையில் உள்ள திருவே என் உயிர் என்றும் கூறுகிறார் மாணிக்கவாசகர் ! 
 🔴 திருநாவுக்கரசரும் கண்ணே மணியே பாவையே என்று இதையே பாடுகிறார் !
 திருப்பாவையும் திருவெம்பாவையும் சைவமும் வைஷ்ணவமும் நம் இரு கண்கள் போன்றதே ! 
 இருவர் பாடலும் ஆன்மாவை உணர, ஆன்மா கடைத்தேற காட்டும் வழியே ! விழியே !
இறைவன் திருவடிகளே நம் கண்கள்!! 
-
ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
வள்ளல்பெருமான் மலரடிகளே போற்றி போற்றி!! 
அனந்தகோடி சித்தர்கள் மகான்கள் 
ஞானிகள் பொன்னடிகளே போற்றி போற்றி!!