புதன், 18 மார்ச், 2015

சன்மார்க்கம் என்றால் என்ன?

சன்மார்க்கம் என்றால் என்ன?
என்பதை முதலில் சன்மார்க்கி என்று சொல்லும் நீ உணர்ந்து கொள்!

சகலரும் சேர்ந்தது தான் சன்மார்க்கம்!  உலகில் உள்ள எல்லா மதத்தவரும் எல்லா நாட்டவர்களும் எல்லா ஜாதி மற்றும் பிரிவினரும் எல்லாம் வல்ல இறைவனின், ஒரே இறைவன் தான் உலக்குக்கு என்று உணர்த்தி நாம் எல்லோரும் அந்த ஒரே இறைவனின் பிள்ளைகளே! நாம் அனைவரும்
உலக மக்களாகிய  அனைவரும் சகோதர சகோதிரிகளே என அறிய செய்யவேண்டும்! உணர செய்ய வேண்டும்! அது தான் சன்மார்க்கம்!

ஊரோடு ஒத்துவாழ்! கூடி வாழ் என்றெல்லாம் வாழ்பவன் தான்
சன்மார்க்கி! துவேசம் காண்பிப்பவன் ஆணவம் காண்பிப்பவன் சன்மார்க்கி அல்ல!

விபூதி பூசுவதும் பூசாமல் இருப்பதும் சன்மார்க்கம் அல்ல! தரும சாலையில் மேட்டுகுப்பத்தில்  பின் எதற்காக விபூதி பிரசாதம் கொடுக்கிறார்கள்?!

வள்ளல் பெருமான் காட்டிய ஞான பாதையில் பீடு நடை போடுங்கள்! எம்மதத்தவர்களையும் அரவணைத்து சன்மார்க்கம் பற்றி எடுத்துக்கூறுங்கள்!

ஜீவகாருண்யம் என்றால் அன்பு! மனிதர்கள் மட்டுமல்லாமல் எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு காட்டு!

சாப்பாடு போடுவது அதில் ஒன்று தான்! சாப்பாடு போடுவது மட்டும் தான் ஜீவகாருண்யம் என்று தவறாய் கருதி விடாதீர்கள்!?

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

1 கருத்து:

  1. வணக்கம்
    ஐயா

    இந்துக்கள் அறிய வேண்டிய விடயம்.... வெகு சிறப்பாக உள்ளது.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

Popular Posts