Friday, February 7, 2014

எல்லோரும் பெறலாம் "ஞானம் "

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

ஆன்மநேய ஒருமைப்பாடுடையீர் ,

வந்தனம் ! இந்தியா ஞான பூமியில் பிறந்த நீவீர் புண்ணியசாலிகள் தாம் !
எண்ணிலா ஞானிகள் பிறந்த, சித்தர்கள் இருக்கின்ற ,
திரும்பும் இடமெல்லாம் திருக்கோயில்கள் நிரம்பிய ஞான பூமியில் பிறந்த
நாம் கொஞ்சமாவது ஞானத்தை பற்றி அறிய வேண்டாமா ?

"கல்தோன்றி முன்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் !" வாழும் தமிழ்நாட்டில் வாழும் நீவீர் வாழ்வது ஒரு வாழ்வா ?
சற்று சிந்தித்து பார்க்க !

மனிதன் முதலில் மனிதனாக வாழ வேண்டும் !? நல்லொழுக்கம் அவசியம் வேண்டும் ! நற்பண்புகள் இருக்க வேண்டும் ! சத்தியம் தவறாது வாழ வேண்டும் ! எவ்விதத்திலும் அறிவை மயக்கும் , உடலை கெடுக்கும் போதை பொருட்களை உபயோகிக்கவே கூடாது ! மாமிச உணவை எக்காரணம் கொண்டு உண்ணக்கூடாது ! சுத்த சைவ உணவையே உட்கொள்ள வேண்டும் !

மாதா ,பிதாவை பெற்ற நீவீர் குருவை பெற்றதுண்டா ? குரு வழியேதான் கடவுளை காண முடியும் ! குருவே பரப்ப்ரமம் ! பிறந்ததில் இருந்து நீங்கள்
தெரிந்து கொண்ட ஒவ்வொன்றும் யாரோ ஒருவர் சொன்னது தானே ! அவரெல்லாம் குருவல்ல ! நீ யார் ? என அறிவித்து உன்னை நீ அறிய உபதேசிப்பவர் , தீட்சை தருபவர் யாரோ அவரே குரு ! சற்குரு ! அப்படி ஒரு குருவை தேடு !!

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும். 

எல்லாம் வல்ல இறைவன் , எங்கும் நிறைந்த இறைவன் மனித தேகத்தில் உயிராக சிற - நாடு - உள் - ஜோதியாக துலங்குகிறார் ! ? இது தேவ ரகசியம் ! வேத ரகசியம் ! ஞான ரகசியம் ! உன் உயிரான இறைவனை நீ காணவேண்டாம ? கண்டாலே ஞானம் ! கண் தானே காண வேண்டும் ? அந்த கண் வழியாக விழியை காண்பிப்பார் ஞான குரு !!

கண் தானம் எல்லோரும் செய்யலாம் அல்லவே ? எவர்க்கும் எவர் கண்ணையும் கொடுக்கலாம் அல்லவா ? எப்படி ? எல்லோர் கண்மணியும் ஒரு போல இருப்பதால்தான் !!கடவுள் ஒருவரே ! ஆத்மா ஒன்றே ! கண்மணியும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்கும் ஒரு போலவே உள்ளது ! ? " ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் " என்கிறார் திருவள்ளுவர் ! மக்கள் அனைவருக்கும் ஒன்று போல ஒத்திருக்கும் கண்ணை அறிதவன் உயிர் வாழ்வான் ! சாகமாட்டான் ! ஞான பெறுவான் என்கிறார் !

தாயின் கருவிலே உருவாகும் முதல் உறுப்பு கண் ! பிறந்ததிலிருந்து சாகும் வரை 100 வயதனாலும் வளராதது கண் ! கண்மணியில் ரத்தம் இல்லை ! எலும்பில்லை ! நரம்பில்லை ! நம் உடலில் இருந்தாலும் உடம்பில் ஒட்டாது , பூமி ஆகாயத்தில் இருப்பது போல் , கருவிழியுள் கண்மணி சுற்றிக்கொண்டிருக்கிறது !? தேவே ரகசியம் இது !

குரு உபதேசம் பெற்று மெய்பொருள் - திருவடி - நம் இரு கண்கள் என உணர்ந்து தவம் செய்தால் கிட்டும் " ஞானம் ! "

கன்னியாகுமரி " தங்க ஜோதி ஞான சபை " இது பற்றி விரிவாக 25 ஞான நூற்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள் ! எல்லோரும் ஞானம் பெற வேண்டும் ! இதுவே குறிக்கோள் ! " வாலை " தான் கன்னியாகுமரி ! திருவருட்ப்ரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகளே எமது ஞான சற்குரு !

வருக ! பெறுக ! உணர்க ! வாழ்க !

என்றும் உண்மையுள்ள ,
சிவ செல்வராஜ்
தங்க ஜோதி ஞானசபை
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
www.vallalyaar.com


ஞானசற்குரு சிவ செல்வராஜ் அருளிய ஞானநூற்கள் !

* 1 கண்மணிமாலை
* 2 அருள் மணி மாலை
* 3 ஸ்ரீ பகவதி அந்தாதி
* 4 அருட்பெருஞ்ஜோதி அந்தாதி
* 5 சன்மார்க்க தெய்வம்
* 6 சற்குரு கோவிந்த சுவாமிகள்
* 7 அஷ்ட மணிமாலை
* 8 செல்வமே சீர்தாருமே
* 9 செந்திலாண்டவர் பாமாலை
* 10 அன்பு உதய மலர்
* 11 வள்ளலார் வழியே
* 12 ஜோதி மணி மாலை
* 13 ஜோதி ஐக்கு அந்தாதி
* 14 சத்திய சாய்பாபா
* 15 சனாதன தர்மம்
* 16 வள்ளல் யார்
* 17 இயேசு எழுபது
* 18 ஞானக்கடல் பீர் முகமது
* 19 திருவருட்பா மாலை – பாகம் 1
* 20 திருவருட்பா மாலை – பாகம் 2
* 21 திருவருட்பா மாலை – பாகம் 3
* 22 திருவருட்பா மாலை – பாகம் 4
* 23 சாகாக்கல்வி
* 24 மந்திர மணிமாலை
* 25 திருவாசக மணிமாலை
* 26 ஞானம் பெற விழி
* 27 மூவர் உணர்ந்த முக்கண்
* 28 ஜீவகாருண்யம் - உன்ஜீவனை கருணையுடன் பார்
* 29 ஆன்மநேய ஒருமைப்பாடு
* 30 உலக குரு வள்ளலார்

1 comment:

  1. வெட்ட வெளியின் ஞானம் தேடுபவர்களுக்கெல்லாம் சொத்து என்பதை மிக அற்புதமான பதிவில் சொல்லி விட்டீர்கள் .நன்றி .

    ReplyDelete

Popular Posts