வெள்ளி, 22 நவம்பர், 2013

விழித்திரு

விழித்து விழித்திமைத்தாலும் சுடர் இலையேல்
விழிகள் விழித் திளைப்பதலால் விளை வொன்றும் இல்லையே



குரு இல்லாமல் நூற்களை படித்து  கண்டவர்
பேச்சை கேட்டு தான்தோன்றித்தனமாக செயல்படும் ,தியானம் செய்பவர்கள் துன்பத்தையே அடைவர்!!  என்கிறார்!

குருவைப்  பெற்று ஞான சற்குருவை பெற்று திருவடி உபதேசம் தீட்சை பெற்று கண்மணியில் உணர்வு பெற்றுவிழித்திருந்து  தவம்  செய்பவரே உய்வர்! ஞான சற்குரு வழி திருவடி தீட்சை பெற்றாலே நம் கண்ணில் சுடர் உதயமாகும்!

வலது கண்ணில் சூரிய சுடர் உதயமாகும்! இடது கண்ணில் சந்திர சுடர் உதயமாகும் இரு கண்களிலும் சூரிய ஜோதி சந்திர ஜோதி தோன்றியே விழித்திருந்து கண்களை விழித்து விழித்து நோக்க நோக்க இரு சுடரும் பெருகி  ஒன்றாகி  உள்ளே பாயும்!

இரு  கண்ணும் உள்ளே சேரும் இடத்தை  சென்றடையும்! அந்த இடத்தில் அக்னி சுடர் உதயமாகும் பெருகும்! பெருகணும் அதுவரை நாம் விழித்து உற்றுப்பார்த்து உணர்ந்து ஒளிப்பெருக்கு ஒளி பெருக்கி தவம் செய்து கொண்டயிருக்க வேண்டும்!!

"உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடும்  மந்திரம்" என சித்தர் பெருமகனார் கூறுகிறார்! இதுவே ஞானம் பெற ஞானிகள் கூறிய தந்திரம்! விழித்திரு-விழிப்புணர்வுடன் இரு- விழியிலேயே இரு! வீழாமல் இரு !
"சும்மா -இரு"


திருவருட்பாமாலை -  நாலாஞ்சாறு


திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts