வெள்ளி, 14 ஜூன், 2013

தை பூசம்(2013) தீட்சை பெற்ற அன்பர்களுக்கு அருளிய உபதேசம்.


ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் வடலூர் தை பூசம்(2013) அன்று திருவடி தீட்சை பெற்ற அன்பர்களுக்கு அருளிய உபதேசம்.


இறைவனை காண முதலில் நம் உயிரை காண வேண்டும்.
உயிரை காண ஒரு வாசல் உள்ளது.

நாம் செல்ல வேண்டிய வழி. அதுவே நம் கண்மணியாகும்.


வள்ளலார் அனைவரும் மரணமில பெருவாழ்வு பெற விரும்பினார்.

இதை ரகசியமாக வைத்தால் பலருக்கு தெரியாமல் போய்விடும்.
அனைவரும் விடியோவை கண்டு, குருவை நேரில் சந்தித்து தீக்சை பெறுங்கள்.

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே
 

திருமந்திரம் - 1598.

வீடியோ 15 நொடியில் ஆரம்பிக்கும். பொறுமைக்கு நன்றி.

2 கருத்துகள்:

  1. அய்யா உங்களின் 'தை பூசம்(2013) தீட்சை பெற்ற அன்பர்களுக்கு அருளிய உபதேசம்.' கேட்டேன் , மிகவும் எளிமையாக உயிர் உய்யக்ககூடிய 'சித்தர்கள் காண்பித்த வழியை '
    எளிமைபடுத்தி கூறியதற்கு எனது பணிவான நன்றியை இங்கு கூறி கொள்கிறேன். உயிர்(ஜீவாத்மா ) என்பது அந்த பரம்பொருள் பேரொளியில் வந்த சிறு அணு , அந்த யிவ்வித களங்கம் அற்ற பரம்பொருள் இடம் இருந்து எவ்விதம் இந்த ஜீவாத்மா பிரிந்தது. மூலமும் களங்கமற்ற பரம்பொருள் , அதில் இருந்து பிரிந்த ஜீவாத்மாவிடம் எப்படி மும்மலம் ஒட்டியது .. ஏன் இந்த பிறப்பு சக்கரத்தில் ஜீவா ஆத்மா சுழல்கிறது ..
    மூலத்திடம் களங்கம் இல்லையென்றால் எப்படி , இந்த ஜீவாத்மாவிடம் களங்கம் ஒட்டியது ..
    என்னக்கு தெளிவான பதிலை கூறவும் .. அப்படிப்பட்ட பேரொளி ஏன் இந்த ஜீவாத்மாவை தனியாக பிரிக்க அல்லது பிரிந்து செல்ல அனுமதித்தது ... எங்கிருந்து இந்த ஜீவத்மாவிற்கு மும்மலம் வந்தது ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்! தாங்கள் கேட்ட கேள்வியை தவ அனுபவம் மூலம் ஒவ்வொருவரும் பெற வேண்டும். நமக்கு ஒரு நோய் வந்து விட்டது என்று வைத்து கொள்வோம். நாம் நோயை ஆராய்வதை விட்டு விட்டு வந்த நோயை குணப்படுத்துவது எப்படி என்று தானே பார்ப்போம்.

      அதுபோல நாம் பிறந்து விட்டோம் பிறப்பின் நோக்கமும், இனி பிறவாமல் இருக்க வழியையும் ஏன் நாம் இந்த ஜீவாத்மாவாக பிரிந்து வந்தோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும் தவத்தின் மூலமாக.

      இவைகள் எல்லாம் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது.... அனுபவத்தில் பெற வேண்டியது அய்யா. அப்படியே இதற்கு ஒருவர் பதில் கூறினாலும் நாம் அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு பக்குவமும் வேண்டும்.

      இது எனது தாழ்மையான கருத்து அவ்வளவே.

      நீக்கு

Popular Posts