"உணக்கி லாததோர் வித்து மேல்வினை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே"
எங்கள் ஊரில் வீட்டில் மளிகை பொருட்களை வாங்கி முதலில் வெயிலில் காய வைப்பார்கள். பின் பொடிசெய்து கொள்ள வேண்டியதை பொடி செய்து வைத்துக்கொள்வர்! வெயிலில் காய வைத்த பொருட்களை காய்ந்தாகிவிட்டதா உலர்ந்து விட்டதா என்பதை "உணங்கியாட்சா" என்பர்!
மாணிக்கவாசகர் அருளிய திருவாசக சொற்கள் தூய தமிழ்ச்சொற்கள்! இங்கே உணக்கிலாததோர் வித்து என்பது காயாத - ஈரம் போகாத வித்து எனப்பொருள்! காய்ந்த வித்து முளைவிடாது!
ஈரப்பதமான வித்துதான் முளைக்கும்! இங்கு நம் பாவவினைகள் மும்மலங்களால் சூழப்பட்ட ஆன்மஒளி ஈரப்பதமாக இருக்கும்! நாம் ஞானதவம் செய்து சுத்த உஷ்ணத்தை பெருகச் செய்தால்
வித்து உலரும்! நம் ஆன்மவித்து ஈரம்போய், மும்மலம்போய் ஒளியால் வருபட்டுவிடும்!
தீயில் வாடிய வித்து எப்படி முளைக்கும்?! நாம் மீண்டும் பிறக்காமல் இருக்க நம் ஆன்மாவை ஈரப்பதம் இல்லாமல் சூடேற்றி உலர வைத்து பின் வறுத்துவிட வேண்டும். நாம் மீண்டும் முளைக்க மாட்டோம்! பிறக்க மாட்டோம் எவ்வளவு அருமையான உதாரணம் கொடுத்து கூறுகிறார் மாணிக்கவாசகப்பெருமான்!
திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.