புதன், 13 பிப்ரவரி, 2013

சமாதியில் மூழ்கினால் குரு எழுப்பி விடுவார்!!



தூக்கத்தில் மனம் ஒடுங்கும்!

ஞான தவம் செய்யும் போது மனதும் பிராணனும் ஒடுங்கும்!

மனம் செம்மையாக பக்தி செய்!
ஞான நூற்களை படி!
கோவிலுக்கு போ!
புண்ணியர்களை தரிசனம் செய்!
சத்சங்கத்தில் கூடு!
எல்லாவற்றிக்கும் மேலாக தாயை பணி!
வாலையை பணி! கன்னியாகுமரிக்கு வா!
பகவதியம்மனை வணங்கு!
அருள் பெறுவாய்! ஞானம் பெறுவாய்!
துர்க்குணங்கலில் இருந்து மனம் விடுபடும் !
நம்மை பெற்றவள் வாலை!
நம்மை வளர்ப்பவள் வாலை!
நம்முள் இருந்து  வாழ வைப்பவளும் வாலையே!
அந்த வாலையை பணிய வேண்டாமா?
அருள் பெறவேண்டாமா?

மனம் ஞான தவத்தால் செயலற்றால் பிராண சக்தி வெளிப்படும்a!
மேலும் மேலும் தவம் தீவிரம் ஆகும் போது  பிராணனும்
நிலை பெறும் ஒடுங்கும்! இதுவே சமாதி!

இங்ஙனம் சமாதி கூடி சமாதி கூடி தவம் செய்து கொண்டே வரவேண்டும்! ஒரே அடியாக சமாதி அனுபவத்தில் ஆழ்ந்து விடக்கூடாது!

இதற்குதான் தக்க  குரு வேண்டும் என்பது! சமாதியில் மூழ்கி விட்டால் குரு எழுப்பி விடுவார்!

ஏனெனில் குரு தீட்சை பெற்றது முதல் உன்னுடன் சூக்சும நிலையில் உன் ஞானசற்குரு கூடவே இருப்பதால்!? சமாதி ப்பழக்கம் பழக்கம் அல்ல
சகஜ ப்பழக்கமே பழக்கம் என வள்ளல் பெருமான் தெளிவாக ஞான
வழியை கூறுகிறார்!

சமாதி அனுபவம் பெறு! சமாதியில் போய்  போய் வா! சமாதிக்கும் மேலான ஞான நிலை பெறுவது தான் நம் ஒரே லட்சியம்!? நம் உயிரான வாலை தாயின் அமுதம் பருகனும்! பேரொளியோடு ஒளியாக , அருட்பெருஞ்சோதி யோடு நம் ஆத்ம ஜோதியை இரண்டற கலக்க வேண்டும்!! இதுவே ஞான நிலை!

அப்போது தான் மோட்ச பிராப்தி ! கடவுள் மயமாதல் ! நான் அதுவாதல் !நான் வேறு அது வேறு இல்லாத ஒன்றான நிலை! இரண்டும் ஒன்றிய ஞான மோன நிலை!

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.


               

1 கருத்து:

Popular Posts