இறைவனை யடைய வழி காட்டும் விழியை எண்ணி தவம் செய்யும்
ஆத்ம சாதகனை தேவர்களும் விரும்புவர்!
உலகத்தில் உள்ளவர்களாலும் மதிக்க படுவர்!
உலகிலே அரிதினும் அரிதான இந்த ஞானம் புரிவர்,
ஞான தானம் செய்வோர் எல்லோராலும் மதிக்கபடுவர்!
வணங்கபடுவர்!
ஞான சாதனை புரிந்து அங்காங்கே சமாதி கொண்ட
ஞானிகள் கோவிலை அடைந்தால் சூட்சமமாக
வந்து நம்மை ஆசிர்வதிப்பார்!
அருள் புரிவர்!
ஞான பாதையில் பீடு நடை போட உதவுவர்!
எனவே சமாதி ஸ்தளங்களுக்கு போங்கள்!
அங்கே சமாதி கொண்ட ஞானியர் அருள் புரிய காத்திருக்கிறார்கள்!
நூறு கோயில்களுக்கு போவதை விட ஒரு
ஜீவன்முக்தர் சமாதி கோவிலுக்கு போய் தவம்
செய்வது புண்ணியமே!
நூறு சமாதி கோவிலுக்கு போய் தவம் செய்வதை
விட உயிரோடு இருக்கும் நடமாடும் ஒரு ஞானியை
காண்பது உத்தமம் !
ஞானியே ஞான சற்குருவாகி ஞான பாதையை காண்பிப்பார்,
பல ஞானிகள் அருளுக்கு பாத்திரமானவர்
ஞான சற்குருவே!
அப்படிப்பட்ட ஞான சற்குரு "பார்க்க" கோடி வினை தீருமே!
குருவே பரப்பிரம்மம்!!
திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
அய்யா ,
பதிலளிநீக்குதாங்கள் பதிந்த கருத்து மிக அருமை.தாங்கள் ,சமாதி முகவரியை பகிர்ந்து கொண்டால் நலம் பயக்கும்.
மிக்க நன்றி.
Please click Saravanakumar B(above comment), he is maintaining all the list of jeevasamadhi.
பதிலளிநீக்கு