திங்கள், 24 டிசம்பர், 2012

செத்தபின் ஏதடா மோட்சம்!?


நம் உடலில் உள்ள தசவாயுக்களில் ஒன்று தனஞ்சயன்! ஒரு மனிதன் இறந்தபின் அவன் உடலில் இருப்பது தனஞ்சயன் வாயு மட்டுமே!  உயிர் போன உடல் வீங்க செய்து அழுகச் செய்து புழுக்கூடாக்கி அழிப்பதே தனஞ்சயன் வாயுவின் வேலை! பிணத்தை எரிக்கும் போது டமால் என்ற சத்தத்துடன் பிணம் எழும்பும்! அதன் சிரசு வெடித்து தனஞ்சயன் வெளியேறுவதே! பிணத்தை புதைத்தால் 3 நாட்களில் 72  மணி நேரத்தில் தனஞ்சயன் வெளியேறும்! 

சிலர் சாமியாராய் இருந்து காலத்தை ஓட்டிய பின், காலன் வந்து சீவனை கவர்ந்து செல்வான்! சீவன் போனால் அவன் சாமியல்ல! போலி சாமியாரின், செத்த சாமியாரின் அறியாமையில் மூழ்கிய சீடர்கள் சாமியாருக்கு  கபால மோட்சம் கொடுத்து விடுவர்?! எப்படி தெரியுமா? செத்த சாமியாரின் தலையில் தேங்காயை ஓங்கி அடித்து  கபாலத்தை பிளப்பார்  தனஞ்சயன் வெளியேறும் இரத்தமும் சிறிது வடியும் ! முட்டாள்தனத்திலும் முட்டாள் தனம் இது தான்! 

செத்தபின் ஏதடா மோட்சம்!? 

சாகாமலிருந்து ஞானம் பெற்றால் அல்லவா இறைவன் திருவடியை அடையலாம்! மோட்சம் கிட்டும்! 

ஞான தவம் செய்பவர், கண்மணி ஒளியால் 
கணை எய்துவது போல் ஒளி உள்  போகும் 
போன ஒளி அங்கே உள்ள கசடுகளை நீக்கும்!  

அழுக்கை போக்கும்! 
தனஞ்செயனும் போய் விடும்! 
உயிர் தூய்மை அடையும். 

ஒளி பெருகும் ஞானம் கிட்டும்! இரு கண்ணும் உள் சேரும் அக்னி கலை! சீவனாகிய சிவன் துலங்குமிடம்! வாலை இருப்பிடம் ! சுற்றிலும் அழுக்கு தனஞ்செயனும் ! ஞான தவம் செய்து கண் ஒளி உள் போனால் முதலில் சுத்த படுத்தும் ஒளி மிகுந்து முச்சுடரும் ஒன்றாகும் பின்னரே ஜீவகாட்சி தொடர்ந்து சிவனை அடைய வாலை அமுதம் சாப்பிடனும் இதெல்லாம் ஞான அனுபவம்! திருநாவுக்கரசர் எவ்வளவு உயர்ந்த ஞான அனுபவ நிலையை
கூறி இருக்கிறார் பாருங்கள்

3 கருத்துகள்:

Popular Posts