புதன், 9 மே, 2012

ஐந்தொழில் புரியும் வள்ளலார்!!



இறைவன் ஒருவரே!! அவர் அருட்பெருஞ்சோதி!! 


வள்ளல் பெருமான் உலகில் இருக்கும் உயிர்கள் எல்லாம் ஒளி வழி
பெற்றிட ஐந்தொழில் செய்கிறார். இதை அகவலில் குறிப்பிட்டு உள்ளார்கள்.

ஐந்தொழில் என்பது

  1. படைத்தல்
  2. காத்தல்
  3. அழித்தல்
  4. மாயையில் இட்டு மறைத்தல்
  5. அருளல்


அவர்


படைக்கும் போது நான்முகன்

காக்கும் போது நாரணன்,

அழிக்கும் போது ருத்ரன்,

மறைக்கும் போது மகேஸ்வரன்,

அருளும் போது சதாசிவன்.




அதை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்  ஐந்தொழில் எப்படி புரிகிறார்  என்று  வள்ளல் பெருமான் அகவலில் பாடிய வரிகள்..



சிருட்டித் தலைவரைச் சிருட்டி அண் டங்களை
அருட்டிறல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

காவல் செய் தலைவரைக் காவல் அண்டங்களை
ஆவகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி

அழித்தல் செய் தலைவரை அவர் அண்டங்களை
அழுக்கற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

மறைத்திடு தலைவரை மற்றும்  அண்டங்களை
அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி

தெளிவு செய் தலைவரைத் திகழும் அண்டங்களை
அளிபெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

அருள் பெறிற் துரும்பும்  ஓர் ஐந்தொழில் புரியும்
தெருள்(தெளிவு) இது எனவே செப்பிய சிவமே

உலகு உயிர்த் திரளெலாம் ஒளி நெறி பெற்றிட
இலகும் ஐந்தொழிலையும்  யான் செயத் தந்தனை

முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந் தொழிலளிக்கும் அருட்பெருஞ் ஜோதி



சன்மார்க்க கொள்கையில் ஐந்தொழில் பற்றி  வள்ளலார் உரைநடை
பகுதியில் என்ன சொல்லி உள்ளார்?
இங்கே சொடுக்கவும்



1 கருத்து:

  1. அன்புள்ள அய்யா அவர்களுக்கு,
    திருஅருள் பிரகாச வள்ளலாரின் அருட்பெருஞ்சோதி அகவல் இருந்து ,மேற்கோள் காட்டி ,நன்கு உணர்த்திய்யமைக்கு மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு

Popular Posts