வெள்ளி, 27 ஏப்ரல், 2012

தர்மச்சாலை >> சத்திய ஞானசபை


தருமசாலை கட்டி சாப்பாடு போட்டார் வள்ளலார்! சரி!
ஊருக்கு ஊர் சன்மார்க்க அன்பர்கள் வள்ளலார் பெயரை சொல்லி
அன்னதானம் செய்கிறார்கள்! உலகெங்கிலும் சன்மார்க்க சங்க
அன்பர்களால் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது!
மிகவும் மகிழ்ச்சி! ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றால் சாப்பாடு போடுவது என்று மட்டுமே கூறுகின்றனர் அறிவிலிகள்!

வள்ளலார் என்ற ஞானக்களஞ்சியம் அறிவுப் பெட்டகத்தின் பெயர்
சொல்லி அறிவே இல்லமால் சாப்பாடு போடுவதை மட்டுமே செய்கிறார்கள்! ஏனய்யா, உன்னை சாப்பாடு போடு என  சொல்வதற்காகவா வடலூர் ஞானி வள்ளலார் அவதரித்தார்?  சற்று சிந்திப்பாய் சன்மார்க்கியே!!



ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றால் சாப்பாடு போடுவதல்ல!  வள்ளல்
பெருமான் ஜீவகாருண்ய  ஒழுக்கம் என்று ஒரு தனி நூலே வெளியிட்டார். அதை முதலில் படியுங்கள்!

தர்மச்சாலை அமைத்து சாப்பாடு போட்ட வள்ளலார் சத்திய ஞான
சபை எதற்கு அமைத்தார்?  "தை பூச ஜோதி  தரிசனம் காண தவறாதீர்கள்" என்று வள்ளல் பெருமான் சொல்ல காரணம் என்ன?  சிந்தித்தீர்களா? அதிதி போற்றும் அருங்குணம் நம் மக்களிடம் உண்டு! சாப்பாடு ஒரு பெரியவிசயமேயல்ல!

சாப்பாட்டை பற்றி நினைக்காமல், சாவுக்காக, பிறந்ததில் இருந்து
நீங்கள் படும்பாட்டை சற்று சிந்தித்து கடைத்தேற வழிதேடுங்கள்!
சாப்பிட்டு சாப்பிட்டு சாவை நோக்கியே காலத்தை போக்குகிறீர்கள்!

வாழ பிறந்த நாம் சாகாமல் வாழும் வழியை கூறிய வள்ளலார்
வழிநடப்போம்! வெறும் உபதேசம் மட்டும் செய்யாமல், தானும்
ஒளியுடலாகி மரணமிலா பெருவாழ்வு பெற்று இன்றும் நமக்கு
 தோன்றும், அருளும் துணையாக திகழ்கிறார்! இது சத்தியம்!
உண்மை!

150  வருடங்களுக்கு முன் வடலூர் பெருவெளியில் உலா வந்த
அந்த உத்தம ஞானியின் வழி நடப்போம்! அவர் திருவருட்பா
படிப்போம்! மரணமிலா பெருவாழ்வு பெற ஜீவகாருண்ய ஒழுக்க
நெறிப்படி நடப்போம்! அன்னதானமும் செய்வோம்! முக்கியமாக
ஞானதானம் தான் செய்யவேண்டும்!!

-ஞான சற்குரு சிவசெல்வராஜ் 
தங்க ஜோதி ஞான சபை 

திருவடியை

நினைந்து நினைந்து 

ணர்ந்து ணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து 

ன்பே நிறைந்து நிறைந்து 
ற்றெழுங் கண்ணீரதனால்  
உடம்பு நனைந்து நனைந்து  
ருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் 

நாம் வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் 
வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன்(கற்பனை) 
பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே! - ஞானசரியை




படிக்கவேண்டிய பதிவுகள் 

1   தானம் தவம் (ஞான தானம்)

குரு வார்த்தை!

3 தவம் - சும்மா இரு!

4 திருவடி தீட்சை(Self realization)

1 கருத்து:

  1. மிக்க நன்றி.தங்களது பதிவுகள் அனைத்தும் அருமை .
    கல் நெஞ்சை கரைக்கும் பதிவுகள்.போற்றி பாதுக்காக்க படவேண்டியவை .

    பதிலளிநீக்கு

Popular Posts