வியாழன், 22 மார்ச், 2012

மரணம் - ஆகாமிய கர்மம் என்ன தொடர்பு?



மரணம் எப்படி இருக்கும்?! மயக்கம்-தூக்கம்-மரணம் என மூன்று
நிலை உள்ளது. மயக்கம் என்பது நம் உணர்வு பிசகும் நிலை. உயிர்
நிலை கொள்ளாமல் தடுமாறுவதே மயக்கம். மிகக்குறுகிய காலம் உணர்வு
இல்லாமல் போவது.

தூக்கம் - நம் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம். உயிர் நிலை
கொள்ளும் நேரம், ஒடுங்கும் நேரம். நாடு உடலில் ஒடுங்கும். மிக குறைந்த
அளவில் உணர்வு இருக்கும்.

மரணம் என்பது உயிர் உடலில் இருக்க முடியாமல் உடலை விட்டு
வெளியேறுதல்.

மரணம் நம் கையில்!? தடுக்கலாம்!?

மரணம் வர காரணமான ஆகாமிய கர்மம் பாதிக்காத தன்மை பெறவேண்டும்.

உடலை விட்டு உயிர் பிரியாமல் மிக மிக கவனமாக பார்த்து கொள்ளவேண்டும்.

உடலில் உயிரை இறைவன் எங்கு பத்திரமாக வைத்திருக்கிறானோ?! அங்கேயே அதை பத்திரப்படுத்துவது தான் புத்திசாலித்தனம்!

அங்கே இருக்கச்செய்து விட்டால் அது தான் ஞான சாதனை! தவம்!!

பிறந்தது இறப்பதற்கல்ல! இறப்பை வெல்வதற்கு! அதுவே ஞானம்.

இதை உரைத்ததுவே சனாதானதர்மம். எல்லா மனிதர்களும் மரணம் வராமல்
தடுக்க பாடுபட வேண்டும்.

"தூங்கி விழிக்க மறந்தவன்" என இறந்தவனை வள்ளலார் குறிப்பிடுகின்றார்.

இன்றைய உலகில் மனிதன் சாப்பாடு  சாப்பாடு என அலைகிறான்.

சாப்பிடதான் வாழ்கிறான் அதற்குதான் உழைக்கிறான் பணம் சேர்க்கிறான்.

ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ சாப்பாட்டுக்காகவே வாழ்கிறான்! பிறப்பதே சாப்பாட்டுக்காகத்தான்!

சாப்பாடு அல்ல! சாவுக்கான பாடு சா- பாடு!? சாவதற்காக படாத பாடுபடுகிறான்.  எப்படியோ சாகிறான்!

சாககூடாது என்பதே சித்தர்கள் உபதேசம்!
சாகாதவனே சன்மார்க்கி!




சனாதன  தர்மம்
ஞான சற்குரு சிவசெல்வராஜ் 




1  வினை கழிந்து தன்னை உணர!!


யார் குரு?


3 தானம் தவம் (ஞான தானம்)






2 கருத்துகள்:

  1. அன்புள்ள அய்யா அவர்களுக்கு,
    அருமையான பதிவு .மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மரணம் என்பது இயற்கை என்று அனைவராலும் சொல்லப்படுகிறது .ஆனால் வள்ளலார் மரணம் என்பது செயற்கை என்கிறார் .தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் என்கிறார் .மரணத்தை தேடி மனிதன் வாழ்கிறேன் ,

    இவை மக்கள் மீது குற்றம் இல்லை நம்முடைய சமய ,மதங்கள் அப்படி சொல்லி உள்ளது அதனால் தான் வள்ளலார் சமய மதங்களை குழி தோண்டி புதைக்க சொல்கிறார் .சமயங்களும் மதங்களும் அழிந்து சுத்த சன்மார்க்கம் வளர்ந்தால் மக்கள் உண்மையை அறிந்து கொள்வார்கள் .

    பதிலளிநீக்கு

Popular Posts