ஞாயிறு, 26 ஜனவரி, 2025

எட்டு எட்டாக வாழ்வை பிரித்துக் காட்டினார்கள்!


சாகாக்கல்வி நூலிலிருந்து : 45

🔥 ஒப்பற்ற ஞானம் ! 🔥

கடவுள், பக்தி என்று சாமியாராய் போகச் சொல்லவில்லை !
"களவும் கற்றுமற"
நல்ல உபதேசமல்லவா ?
ஞானம் இது என அறிய வேண்டாமா ?
நான் யார் என உணர வேண்டாமா ?

ஓர் எட்டில் வளர்ச்சி.
ஈரெட்டில் கல்வி.
மூவெட்டில் இல்லறம்.
நாலெட்டில் பிள்ளைப்பேறு.
ஐயெட்டில் சம்பாத்யம்.
ஆறெட்டில் கடமைசெய்தல்.
ஏழெட்டில் தீர்த்தயாத்திரை.
எட்டெட்டில் சந்நியாசம்.

இப்படி சித்தர்கள் நம் வாழ்வை எட்டுஎட்டாக பிரித்து அக்காலங்களில் செய்ய வேண்டியவைகளை மெய்யுள்ளபோது சிறப்பாக செய்ய அறிவுறுத்தினர் !

எட்டிலிருக்கும், மெய்யிலுள்ள மெய்ப்பொருளைத்தான் ! புரிந்து கொள்ள எட்டுஎட்டாக வாழ்வை பிரித்துக் காட்டினார்கள் !

மனிதா, ஏன் 10 பத்தாக பிரித்திருக்கக் கூடாதா ?

மெய்ப்பொருளை சொல்லும் எட்டாக, எப்படியாவது எட்டை ஞாபகத்தில் கொள்ள வேண்டி, மெய்ப்பொருள் நம் அறிவுக்கு எட்டவேண்டி எட்டு எட்டு என கட்டுரைத்தனர். சுட்டிக்காட்டினர்.

இது மெய்தானே !

பக்தியில் பலர் உடலை வருத்தி பல சாதனைகள் செய்கின்றனர் !
மனோதிடம் இல்லாத கடினமானவர்கள் செய்ய வேண்டியது தான் !
ஆனாலும் இது சரியல்ல !

அன்பே வடிவான இறைவனை, கருணைக்கடலான கடவுளை, அருள்மயமான ஆண்டவனை அடைய கடினபோக்கு தேவையில்லை !

அன்பே கடவுள் என்றனர் ஆன்றோர் ! கடவுளை அடைய அன்பு ஒன்றே வழி !

👁️ மெய்யினுள் மெய்ப்பொருளை அன்பால் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்வதே சும்மா இருக்கும் நிலையே ஒப்பற்ற ஞானம் !

👁️ மெய்யை வருத்தாது, மெய்யிலுள்ள மெய்ப்பொருளை மெய்ஞ்ஞான சற்குருமூலம் அறிந்து உணர்ந்து மேன்மை பெறலாம் !

இது மெய் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

Popular Posts