புதன், 4 செப்டம்பர், 2024

சன்மார்க்க தெய்வம்

 அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி 

தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்சோதி 

ஞான தவம் செய்வீர்!! ஞான தானம் செய்வீர்!! 

இறைவன் திருவடிகளே நம் கண்கள்

சன்மார்க்க தெய்வம் 


நம் இந்திய ஞான பூமியில் எண்ணிலடங்கா கோயில்கள் உள்ளன நாம, ரூப் வித்தியாசமாய் பற்பல கோயில்கள் நிறைந்துள்ளது. பக்தியால் ஞானத்தை காட்டி ஞானத்தால் பரத்தை காட்டும் என்பது முதுமொழி பக்தியால் ஞானத்தை காட்டுவதில் முன்னிற்பது இன்று சபரிமலையிலே கோயில் கொண்டுள்ள ஜோதிஸ்வருபன் தர்மசாஸ்தா  ஐயப்பன்சுவாமியே.


சபரிமலைக்கு செல்ல கடுமையான விரதம் இருக்க வேண்டும். முதலில் மக்களை ஒழுக்கமாக்குகிறது இந்த விரத முறைகள்! தூய பழக்க வழக்கம். எல்லோரையும் ஐயப்பனாகவே பாவிப்பது. எல்லோரும் ஒரே மாதிரி உடை, மாலை அணிவது எல்லோரும் சமம் ஆகிவிடுகிறார்கள்.


காலை மாலை இருவேளையும் புனித நீராடி கோயில் சென்றும் வீட்டிலும் இறைவனை பூஜை செய்து வழிபடுவது சுத்த சத்வ சைவ ஆகாரம் கொண்டு வாழ்வது விரத நாட்களில் பிரம்மச்சரியம் கடைபிடிப்பது. இப்படி மனிதனை மனிதனாக்கும் எல்லா நற்பண்புகளும் விரத நாட்களில் அனுஷ்டிக்கப்படுகிறது.


யாராக இருந்தாலும் நடந்துதான் போகவேண்டும் எளிமையாக வாழ வேண்டும் மலை ஏறித்தான் ஆகவேண்டும். தலையிலே இருமுடிப்பபையை சுமந்துதான் ஆக வேண்டும். நெய் தேங்காய் கொண்டு போகணும்.


பண்பு - பணிவு - எளிமை - பக்தி - தொண்டு - அன்பு - இந்த நாட்களிலே வந்துவிடும்


எப்போதும் இருக்க வேண்டும் இப்படி என வலியுறுத்தவே இந்த விரத முறை! எல்லாமே ஞான தத்துவ விளக்கம்! 18 படி ஏறி ஐயப்பன் என்ற ஒரே நினைவோடு வர வேண்டும். அப்போதுதான்காண முடியும்! அங்கே காணப்போவது மகர ஜோதியை! எல்லாம் வல்ல இறைவனை ஜோதியாக காண நம்மை நாம் தாயர் படுத்திக்கொள்வதே சபரிமலையாத்திரை.


அதற்கு நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துவதே விரதம். மனிதன் எப்படி வாழ 

வேண்டும்? குருவை பணிந்து அவர் வழிகாட்டுதலில் இறைவனை காண பயணப்படவேண்டும்.


இதுவே  சபரிமலை பயணத்தில் முக்கியமானது.


குருசாமியை சந்தித்து மாலை அணிந்து விரதம் காக்க வேண்டும், குரு வழிகாட்ட மலை ஏறி ஜோதி ஸ்வருபனை காணலாம்! சகலரையும் ஒன்றாக்கி பார்க்கிறது சபரி மலை! எல்லோரும் ஐயப்பனே! இதுதானே சன்மார்க்கம்! சன்மார்க்கத்தை போதிக்கும் தெய்வமாக சபரிமலை தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்ப சுவாமி விளங்குகிறார். அந்த சன்மார்க்க தெய்வ புகழ்பாடி அடியேன் மகிழ்கிறேன். சுவாமியே சரணம் ஐயப்பா!


எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே! 

நாம் எல்லோரும் அவர் பிள்ளைகளே இறைவன் தோதிஸ்வரூபன்! 

சரியாக விரதம் இருந்துதான் போகணும்! 

சிரமம் பாராது இறைவா என இருக்கணும்! 

நல்ல ஆகாரம் நல் ஒழுக்கம் வேணும்! 

எல்லோரையும் இறைவனாகவே கருதணும்! 

எந்த பேதமும் யாரிடமும் பார்க்கக் கூடாது!

சன்மார்க்கமே சபரிகிரீசன் வழி! 

வாழ்க சன்மார்க்க நெறி!



மனிதனாகுக!?


உண்பதும், உறங்குவதும், இனவிருத்தி செய்வதும் மட்டும்தான் மனிதனின் வேலையா மிருகங்களும் இதைத்தானே செய்கிறது! 

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது! என ஒளவையார் கூறியது எதற்காக? அறிய வேண்டாமா? குறையின்றி நல்ல படியாக பிறந்த நாம் பிறவிப்பயனை அடைய வேண்டாமா பிறந்தது சாவதற்கா? வாழ்வதற்கா? பிறந்து செத்து! பிறந்து செத்து! இப்படியே போனால் அறிவு பகுத்தறிவு உள்ளவன் - மனிதன் என்று கூற முடியுமா?


மனிதன் என்பவன் யார்? மனதை இதம் செய்ய - பக்குவப்படுத்த தெரிந்தவனே மனிதன்; அதற்குத்தான் பகுத்தறிவு/ எப்படி பக்குவபடுத்துவது? இதை சொல்லித்தரும் குருவை தேடு| நாம் சாகப்பிறக்கவில்லை! வாழப்பிறந்திருக்கிறோம்! எப்படி வாழ வேண்டும்?


பஞ்சமா பாதகங்கள் பொய் கொலை களவு -கள் -காமம் புரியாது நல்ல பழக்க வழக்கம் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். மீன் முட்டை இறைச்சி உணவுகளை உண்ணாதே உடலை கெடுக்காதே.


மது புகை முதலிய போதை பொருட்களை உபயோகிக்காதே நோய்க்கு இடங்கொடேல்.


எல்லா உயிர்களிடமும் அன்பாயிரு!

எப்போதும் உண்மையே பேசு!

ஒருவனுக்கு ஒருத்தி என வாழு!

மண், பெண், பொருள் ஆசையை விடு!


இறைவன் திருவடியில் சரண் புகு! அப்போதுதான் நீ மனிதனாவாய்!!

இறைவன் திருவடியை சரண் அடைவதற்கு! நீ மனிதனாவதற்கு! உன்னையே நீ உணர்வதற்கு ஞானசற்குருவை 

சரணம் அடைந்து குரு உபதேசம் பெற்று தீட்சை பெற்று தவம் செய்தால் உனக்குள்ளே மகரஜோதியை காணலாம்.



கண்விழி கட கடவுளை காண்

இறைவன் திருவடிகளே நம் கண்கள்


கன்னியாகுமரி

தங்கஜோதி ஞானசபை அறக்கட்டளை

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்


ஆன்மீக செம்மல் ஞான சற் குரு சிவசெல்வராஜ் 


Popular Posts