சற்குரு வணக்கம் -ஆன்மீக செம்மல் 
ஞான சற்குரு சிவசெல்வராஜ் 
பூரணமாய்ப் பூத்தெழுந்த புண்ணியமெய் மாமலரின் 
புகழ்விளங்க வந்த அய்யனே வருக! 
புருவநடுப் பொட்டினிடைப் புத்தமுதுப் புனல்பெருகப் 
புதையலான ஞானமெய்யனே வருக! 
மாரணத்தை வெல்லுகின்ற மாமணியின் சாட்சிதனை 
மானுடர்க் களிக்க எண்ணியே வருக! 
மாதவத்தி லாழ்ந்துஞான மன்றிலேறி கனிபறித்த 
மாகுரு சிவசெல்வ ராஜரே வருக! 
காரணமாய் நான்குயகக் காரியமும் ஆற்றிடவே 
கருமணியுள் கானலுமாகியே வருக!
கருவரையும் கல்லரையும் காத்தருளும் கடவுளெனக் 
கண்கலந்த வான வட்டமே வருக! 
ஆரணமாய்ச் சிரசிடையில் அகரமாகி நின்றொளிரும் 
ஆஃதுணர்த்த வந்த செல்வமே வருக! 
அடிபிடிக்க அமரமென்ற அறிவுணர்த்தி ஞானமீயும் 
 அற்புத மெய்ஞ்ஞான குருபரா வருக! வருகவே! 
ஞான சற்குரு சிவசெல்வராஜ்