சனி, 16 மார்ச், 2013

வாலை தாய் தருவாள் அமுதம்!!.

அறிந்து பார் ஆதாரப் பொருளைப் பற்றி
வெளியான சோதியிலே  மேவி நில்லு
வருந்தியந்த வாலை ரசங்கொண்டு  - அகஸ்தியர் பரிபூரணம் 1200


ஏ , மனிதா அறிந்து பார்! நல்ல சற்குருவை நாடி உபதேசம் கேட்டு
தெளிந்து பார் ! எது எல்லாவற்றுக்கும் ஆதாரமானது என்று?

அந்த மூலபொருள், மெய்ப்பொருள், ஆதாரப்பொருள் நம் கண்மணி ஒளியை பற்றி நின்று நிலைத்து தவம் செய்க!

தொடர்ந்து விடாமல் சதா காலமும் செய்பவன் சீக்கிரம் ஒளியை காண்பான்.! தன்முன் வெளியான தனக்குள் இருந்து தன முன்  தன் முன் தோன்றிய ஒளியை காண்பான்!

கண்டு அதிலேயே லயித்தால் மனம் ஒன்றி வேறு சிந்தனை ஏதுமின்றி இருந்தால் உன்னை நீ காண்பாய் !

ஞானம் பெறுவாய்! உன்னுள் இருக்கும் உத்தமனை காண்பாய்! அப்போது வாலை ரசம் கிட்டும்! வாலை தாய் தருவாள் அமுதம் ! அனுபவம்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ் (ஞானம் பெற விழி )

செவ்வாய், 12 மார்ச், 2013

மந்திரம், தந்திரம் எல்லாம் என்ன?

மந்திரம், தந்திரம் எல்லாம் என்ன என்று சொல்கிறார்.

”மந்திர மாவதும் மாமருந் தாவதும்
தந்திர மாவதும் தானங்கள் ஆவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி ஆவதும்
எந்தை பிரான் தன் இணையடி தானே”

இந்த பாடலில் ஒரு கடினமும் இல்லை..... மந்திரம், தந்திரம், தானம், சுந்தரம், தூய்நெறி இது அனைத்தும் எல்லாம்...இறைவன் திருவடியே - பிரான்தன் இணையடி. இதை பிடித்தால் போதும்.... நீங்கள் மந்திரம், தந்திரம் & தானம் எதுவும் செய்ய வேண்டாம்... இதற்குள்ளே அடங்கி விடும் என்று சொல்கிறார்.

இதற்க்கு மேலான மந்திரம் எல்லாம் ஒன்றும் உலகத்தில் கிடையாது....இதனைத்தான் வள்ளுவர் சொல்கிறார்...

”பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.”

திருமூலர் சொல்கிற... இறைவன் திருவடியும் மற்றும் தமிழ்னாட்டிற்க்கே வான்புகழ் தந்த எம் நாயகர் “வள்ளுவ பெருந்தகையும்” சொல்கிற இறைவன் திருவடியும் ஒன்றுதான்... அதுவே நமது... கண்கள். இதை பற்றி பிடிக்கவில்லை எனில் பிறவி என்னும் பெருங்கடலை தாண்ட முடியாது என்றும் சொல்கிறார்.

நான் பதிவதில் உங்களுக்கு நம்பிக்கை வர வில்லை எனில்... சிறிது சிந்தியுங்கள்.... ஒளியுடல் அடைந்த வள்ளல் பெருமான் இந்த பாடலை படிக்காமலா இருந்திருப்பார்... மேலும் அவர் நம்க்கு எதையும் மறைக்காமல்.. வெட்ட வெளிச்சமாக பாடினார். கருணை வள்ளல் அல்லவா எம்து குரு நாதர்......

"என் இருகண்காள் உமது பெருந்தவம் எப்புவனத்தில் யார்தான் செய்வர்"

சனி, 2 மார்ச், 2013

ஜோதி ஐக்கூ


101 ஐக்கூ  கவிதைகள் 101 தெய்வ திருவுருவங்கள் தாங்கி வருகிறது.

முதலில் ஆதிகுரு ஸ்ரீ தட்சணாமூர்த்தி ,

இரண்டாவது ஆதி சித்தர் ஸ்ரீ சிவன்,

மூன்றாவது சித்தன் ஆகிட அமுதம் தரும் தாய் வாலை கன்னியாகுமரி  ஸ்ரீ பகவதி அம்மன்

நான்காவது சித்தன் என உறுதி தரும் தேவ சேனாதிபதி செந்திலாண்டவர்

ஐந்தாவது கலியுக காவலன் ஞானவான் சிரஞ்சீவி ஸ்ரீ ஆஞ்சநேயர்

ஆறாவது பக்தன் சொல்ல பரமன் எழுதிய ஒப்பற்ற திருவாசகம் உரைத்த
ஞானி ஸ்ரீ  மாணிக்கவாசகர்

தொடர்ந்து 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் 20 சித்தர்கள் ஆக 101 தெய்வ திருஉருவங்கள் - இந்நூலை அலங்கரிக்கின்றது. இது அடியேன் செய்த புண்ணியமே!

ஜோதி ஐக்கூ அந்தாதி இரண்டாம் பதிப்பு ஹோசூர் அன்பர்களால் வெளியிடப்படுகிறது. வள்ளலார் அவர்கள் ஆற்றும் ஆன்மீக பணிக்கு உறுதுணையாக இருக்கிறார் என்பதை உணர்கிறேன்!

என்னையும் ஒரு பொருட்டாக கருதி இப்பணி செய்ய வைத்துகொண்டிருக்கும் உலக குரு திருவருட் பிரகாச வள்ளலார் பொற்பாத கமலங்களுக்கு ஆயிரம் ஆயிரம் வந்தனம்! வந்தனம்!



Popular Posts