நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் பற்றித்தான் யோக சாஸ்திரங்கள் 
கூறுகின்றனர். "மூல முதல் ஆறுதலம் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேலாறுதலம் 
காணு காணு" என சித்தர் பெருமக்கள் கூறியுள்ளனர்.
ஞான 
அனுபவ நிலைகள் நம் உடலில் தலைபகுதி மட்டுமே! கழுத்துக்கு கீழேயிருப்பது 
எல்லாம் கர்மாவை செய்பவனயாகும். தலைப்பகுதியிலுள்ள பன்சேந்திரியங்களும் 
கர்மேந்திரியங்கள்தான்.  
தவ நிலையில் கர்மேந்திரியங்களும் மெய், வாய், கண் மூக்கு, செவி எல்லாம் ஞானேந்திரியமாக மாறிவிடுகிறது. 
ஐம்புலன்களும் புறத்தே(வெளியே) செயல் படுகின்றது, ஞான சாதகன் தவம் செய்வது புறத்தே அலைவதை நிறுத்தி அகத்தே(உள்ளே) திருப்புவதுதான். இவை அனைத்தும் மனதின் கட்டுப்பாட்டில் உள்ளது. 
மனம் செம்மையானால் வாயால் மந்திரம் சொல்ல தேவை இல்லை, மூக்கால் காற்று இழுக்க தேவை
 இல்லை. காதில் தோத்திரம் கேட்க தேவை இல்லை. கண்மூடி வாசியோகம் செய்ய தேவை 
இல்லை. உடலால் எந்த பணியும் செய்ய தேவை இல்லை. ஐம் புலன்களை வைத்து  புறத்தே செய்யும் எச்செயலும் ஞான நிலையல்ல!
ஐம் புலன்களும் ஐம் பூதங்களும் ஒன்று சேரும் இடத்தில் இவற்றை ஆட்டிப்படைக்கும் இவற்றை ஆட்டி படைக்கும் மனதை இருத்தினால் போதும். ""பொறிவாயில் ஐந்துவித்தான் பொய் தீர் ஒழுக்க நெறி நெறி நின்றார் நீடு வாழ்வார்" ஐம் பொறிகளின் வாயில் - வாசலில் - கண்ணில் ம்புலன்களை - ஐம்பூதங்களை சுட்டு எரித்தவன் அவித்தவன் - உஷ்னத்தால் நீற்றுபவன் , சத்தியமாக நீடு வாழ்வான் - சாகமாட்டான்.
நம் கண்களில் உள்ள ஒளியை பெருக்க பெருக்க ஒளி ஓங்கி எல்லா மலங்களும் கொஞ்சம் கொஞ்சமாக சுட்டு எரிக்கப்பட்டு விடும். புற செயல்கள் அற்று போக போக உள் முகமாக  ஒளி அலைகள் பாயும். உள்ளே அக்னிகலையை அடையும். இது தான் சாதனை.
"சுட்ட சுடுகாடும் வெளியும் அதுவேயாகும்" என சித்தர் கூறுகிறார். நம் மும்மலம்களும் சுட்டு எரிக்கப்படும் சுடுகாடு நம் கண்கள். 
அங்கே தானே நெருப்பு உள்ளது. உள்ளே போனால் பெருவெளி- வெட்ட வெளிதான். 
 இதைதான் இன்னொரு சித்தர் ஊசி முனை காடு என்றார்.  ஊசி முனைக்குள் சென்றால்
 பெரும்காடுதான். காட்டில் தானே காட்டாறு சாரைப்பாம்பு காட்டானை எல்லாம் 
இருக்கும்!? இவை அனைத்தும் பரிபாசையாக சொல்லப்பட்டதே. ஆறுகுள்ளே சென்றால் 
நெருப்பாருதான்! 
மூலாதாரம் கீழே என்பார் அறிவிலிகள். 
மூல 
முதல் ஆதாரம் ஆறினையும் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேல் ஆதாரத்தையும் 
பாரு பாரு! ஆறுதலமாக ஆறுமுகமாக உள்ளது இரு கண்கள் . கண்ணே எல்லா 
ஆதாரத்திற்கும் மூலம். எல்லாவற்றுக்கும் மூலமான கண்ணே அதில் உள்ள ஊசிமுனை 
துவாரத்தின் உள் ஒளியே நம் ஜீவ ஒளி! 
விநாயகர் அகவலில், மூலாதாரத்தில் மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்து என்று 
அழகாக பாடி உள்ளார் ஔவையார்! மூல ஆதாரம் கண். அதில் தவம் செய்வதால் எழும் 
கனல் பெரும்ஜோதியாக எழும்.கால் எனு பாதம், இறைவன் திருவடி. கண்ணாகிய 
மெய்ப்பொருளில் கருத்து வைத்தால் கனல் மூண்டெழும்.  எவ்வளவு அழகாக சொல்லப்பட்டு உள்ளது பாருங்கள்! கண்ணே இறைவனின் கால் திருவடி! 
வினைகளுக்கு காரணம் கண்ணால் பார்ப்பதே! வினை வரக்கூடிய அம்சம் நம் கண்ணில் 
உள்ளது! அது என்ன? அது வெள்ளை விழி, கருவிழி  அடுத்து கண்மணி. கண்மணியின் 
மத்தியில் ஊசி முனை துவாரத்தை மறைத்து கொண்டு இருக்கும் மெல்லிய ஜவ்வு. 
இந்த ஜவ்வு தான் நாம் பார்க்கும் அனைத்துக்கும் காரணம். அது தான் நம் 
முன்வினை இருக்குமிடம். அதற்க்குத்தக்கபடிதான் இப்போது மனம் செயல்பட்டு 
மேலும் புதுப் புது  வினை உண்டாக்கும். இப்படியே போனால் இதற்க்கு முடிவு? 
வள்ளல்
 பெருமான் உரைத்த ஞான சரியை வழி தான் தியானம். கண்மணியை நினைந்து நினைந்து 
கண்ணீரால் உடம்பு நனைந்து நனைந்து இருக்கும் போது கனல் எழும்பும். மனம்
 அங்கே நிற்பதால் புற செயல்கள் நடைபெறாது புது வினை உருவாகாது. மனம் 
கண்மணியில் நிற்க நிற்க கனல் ஓங்கி வளரும்.ஞான கனல் பெருகினால் முன் உள்ள 
ஜவ்வு கொஞ்சம் கொஞ்சமாக உருகி கரைந்து விடும். ஊசி முனை வாசல் அடைத்து 
கொண்டிதிருந்த ஜவ்வு கிழிந்தவுடன் கண் திறக்கும் என்று ஞானிகள் கூறி 
இருக்கின்றனர்.
இதுவே சாதனை! இது தான் நாம் செய்ய வேண்டிய தவம்.  
ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.