விதியை மதியால் வெல்லலாம்! எப்படி?
விதிக்கப்பட்ட பிராரப்த கர்மம்(~50 % கர்மம்) மூலம் பிறவி எடுத்தோம், நாம் சேர்த்து வைத்த கர்ம வினையால் எடுத்த பிறவி.நாம் பிறந்து வந்தது நாம் முடிவு பண்ணியது அல்ல, நமது தாய் தந்தை முடிவு பண்ணி வந்தது அல்ல.நாம் இப்பிறவி எடுத்து வந்து, நம் மதியால் நமது கர்ம வினையை அழித்து "நாம் யார்" என்று தெரிந்து கொள்ளவேண்டியது.எப்படி தன்னை அறிவது? தவம் செய்யவேண்டும்.
விதி படி வாழ்வது அல்ல மனித வாழ்க்கை! விதியை வெல்ல கூடியவன் மனிதன். இறைவன் நமக்கு ஒரு சான்ஸ் கொடுத்து உள்ளார். 50% கர்மத்தை கொடுத்து மனிதனாக பிறப்பிக்க வைத்தான். மனிதனாக பிறந்த நாம் அதை உணர்ந்து , இந்த விதி வினையில் இருந்து எப்படி விடுதலை அடையவேண்டும் என்று பார்க்க வேண்டும். அதுவே புத்திசாலித்தனம்! பிறந்து. மேலும் மேலும் வினையை சேர்த்து இன்னும் இறந்து பிறக்க கூடாது. நாம் செய்ய வேண்டியது ஏற்கனவே கொண்டு வந்தது ப்ராப்த கருமத்தை தீர்த்து வினை இல்லாத நிலையை தேடவேண்டும். நம் வாழ்வை வினை இல்லாத தன்மைக்கு அமைத்து கொள்ள வேண்டும்.
மேலும் அறிய .....
திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
வெள்ளி, 23 நவம்பர், 2012
வெள்ளி, 9 நவம்பர், 2012
திருசிற்றம்பலம் எங்கு உள்ளது?
திரு - இறைவன்
சிற் - சிறிய
அம்பலம் - கோயில்
இது நமது உடலில் எங்கு உள்ளது? உள்ளம் ஒரு கோயில் ஊன் உடம்பு ஒரு ஆலயம் சொல்ல காரணம் என்ன? சத்யஞான சபை எங்கு உள்ளது?
- இறைவன் ஜோதி. அருட்பெருஞ்சோதி! உயிர் சிறு ஒளி!
- உயிர் எங்கு உள்ளது ? சிற்றம்பலம் எங்கு உள்ளது?
- திரைகள்/கர்ம வினை/மாயை /அகங்காரம் எங்கு உள்ளது?
- தவம் எப்படி செய்வது?
- சுத்த உஷ்ணம் என்பது எப்படி உருவாகும்?
வெள்ளி, 2 நவம்பர், 2012
தன்னை உணர/ஞானத்திற்கு சரியான வழி எது?
தான் என்பது உயிர். இதை அறிய சரியான வழி எது?
பல குரு மார்கள் பல வழி சொல்லுகிறார்கள்.
எது சரி என்று தெரிந்து கொள்வது?
ஒரு பொருள் வாங்கும் போது எவ்வளவு ஆராய்ச்சி செய்கிறோம்.
ரிவ்யு படிக்கிறோம். தன்னை உணர அதை தானே செய்ய வேண்டும்.
எந்த வழி சரியான வழி, எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வது?
பல குரு மார்கள் பல வழி சொல்லுகிறார்கள்.
எது சரி என்று தெரிந்து கொள்வது?
ஒரு பொருள் வாங்கும் போது எவ்வளவு ஆராய்ச்சி செய்கிறோம்.
ரிவ்யு படிக்கிறோம். தன்னை உணர அதை தானே செய்ய வேண்டும்.
எந்த வழி சரியான வழி, எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வது?
லேபிள்கள்:
அருட்பெருஞ்ஜோதி,
சிவ செல்வராஜ்,
திருவடி,
வள்ளலார்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)