புதன், 27 ஏப்ரல், 2016

ஓங்காரம்


 பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும் நின்றோங்கும்
பெருங்கருணை திருவடிகள ........ கதவு திறப்பித்தருளி
அழைத்து சரணமுற்று வருந்திய என் மகனே
மரணமற்று வாழ்க! - வள்ளலார்

 ஓங்காரத்தின் அடிமுடி நடு - இறைவன் பிரணவஸ்வரூபன் - நாதமயமானவன் - ஒளிமயமான இறைவனின் ஒருபக்கம் நாத மயமே! ஒளியான இறைவன் சரிபாதி இடப்பக்கம் ஒலியே!சிவத்தின் இடப்பாகம் சக்தி! ஒளி ஒலி  இணைந்தேதான் உள்ளது! சிவம் சக்தி என்ற இரண்டும் சேர்வது சேர்ப்பது அக்னி!  இதுவே தத்துவம்! 'அ' - வலது கண் சிவன் சூரிய கலை! இடது கண் சக்தி 'உ' சந்திர கலை! முச்சுடரும்  சேர்வதே ஓங்காரம்!  அ - உ -ம்  இதுவே ஓங்காரம்! ஓங்காரத்தில் நின்றோங்குவதே இறைவனின்
கருணை மிகு ஒளித் திருவடிகள்! நம் கண்மணி கதவை திறப்பித்து திருவடியே கதி என சரணடைந்த நம்மை அழைத்து மரணமற்று வாழ்க!மரணமற்று வாழ்க என்று  வாழ்த்தியும் அருள்வார்! அருளினார் வள்ளலாரை! திருவடியை சரண் அடைந்தோர் மரணமற்று வாழ்வார்!

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

தன்னை அறிய வெண்ணிலாவை தான் கேட்க வேண்டுமா?

தன்னை யறிந் தின்பமுற வெண்ணிலா வே  ஒரு
தந்திரநீ - சொல்ல வேண்டும் வெண்ணிலாவே

தன்னையறிந்தாலே இன்பமுறலாம்! தன்னை அறிந்தவனே தலைவனை
அறிவான்! தன்னை- தான் யார் என்பதை ஒருவன் கண்டிப்பாக அறிய
வேண்டும் உணரவேண்டும்! இந்த மானிட பிறவி எடுத்த நோக்கமே
அதுதான்! நான் யார்? நான் - ஆத்மா! நான் ஏன் பிறந்தேன்! நான் எதற்க்காக
வாழ்கிறேன்? எத்தனை காலம் வாழ்வேன்! உலகத்தில் நான் காண்பதெல்லாம்
என்ன? இது போன்ற பல கேள்விகளுக்கும் நான் யார்? என தெரிந்தால் தான்
விடைகிடைக்கும்! தன்னை அறிந்து இன்பமுற வழி சொல்ல  வெண்ணிலாவை தான் கேட்க வேண்டுமா? சூட்சுமம் என்ன? இரகசியம் என்ன?

மலர்த்தியானம்


என்றன் விழி அமர்ந்தவரே

எல்லாம் வள்ளலார் எங்கும் நிறைந்தவர் அகில கோடி  பிரமாண்ட
நாயகர் என் விழியிலும் அமர்ந்திருக்கிறார்! இறைவன்
நம்கண் கரு விழிக்குள் கண்மணி மத்தியில் உள் ஒளியாக
அமர்ந்து இருக்கிறார்!

தன்னருட்டுணை தாண் மலர்த்தியானமே

இறைவா எனக்கு இவ்வுலகில்\வேறெதுவும் வேண்டாம்!
உன் குளிர்ச்சிபொருந்திய தாமரைமலர் போன்ற இரு
திருவடி தியானம் மட்டுமே போதும்!! திருவருட் பிரகாச வள்ளலார்
இராமலிங்க சுவாமிகள் இறைவனிடம் வேண்டியது இது ஒன்றே!
இந்த திருவடி தியானம் செய்பவரே மரணமில பெருவாழ்வு பெறுவார்!
ஒளியுடல் பெறுவார்!

புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு !

புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு ! அதாவது முற்பிறவியில்
நல்ல புண்ணிய கர்மங்களை செய்பவர்களுக்கு அந்த புண்ணிய கர்ம
பலனாக இப்பிறவியில் பூவும் நீரும் உண்டு! பூ என்றால் கண்மலர்!
நீர் என்றால் கண்ணீர்! கண்மணி ஒளியை எண்ணி தவம் செய்பவர்களுக்கு
கண்ணீர் தாரை தாரையாக கொட்டும். உணர்வு பெருகி ஒளி பெருகி
ஞானம் பெறுவார்! அவரையே இறைவன் வலிந்து வந்து மாலையிட்டு
அருள்பாளிப்பான்! புண்ணியம் செய்யுங்கள்! தான தர்மம் செய்யுங்கள்!

ஞானக்கடல் தக்கலை பீர் முஹம்மது

கண்ணிரு பார்வைப் படலத்தை  நீக்கு உன்னை  காண்பதற்கே
 -பீரப்பா

இதன் பொருள் கண் இரு பார்வை - கண்மணியின் முன் உள்ளே
- படலத்தை - சவ்வை - திரையை நீக்கு உண்ணை காண்பதற்கு!
ஞானிகள் எல்லோரது அனுபவும் ஒன்று தான் என இதிலிருந்து
அறியலாம் அல்லவா? ஞானிகள் அனைவரும் ஏக இறைவனை
எண்ணி தவம் செய்தார்கள் என்பது இதில் இருந்து புலனாகிறது அல்லவா?
இதுவே சன்மார்க்கம்!  சம்சாரபாவனை! உலகர் அனைவரும் இறைவனின்
பிள்ளைகளே என்றால் நாமனைவரும் சகோதர சகோதிரிகள் தானே!
ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

கருநெல்லி

ஞான நிலையை கண்ணார நெல்லியங்கனியென காட்டி
-வள்ளலார்

ஞான  நிலையில் - நம் கண்ணே பரிபாசையாக நெல்லிக்கனி
என்றனர் ஞானியர் கரு நெல்லி உண்டு என்பர்! கரு நெல்லி
உலகத்தில் கிடையாது. கண்மணியே கருநெல்லி என்றனர்!

இரண்டு மீன் ஐந்து அப்பம்

இரண்டு மீன்களையும் ஐந்து அப்பங்களையும் ஐயாயிரம்
பேருக்கு பங்கிட்டு கொடுத்தார் இயேசு பிரான்!  இது அற்புதம்அல்ல!
இது ஞானம்! இரு மீன் என்று சொன்னது இரு கண்கள்! 5 அப்பம்
என்று சொன்னது 5 புலன்கள்! ஐம்புலன்களையும் கண்ணில் ஒடுக்கி
கண்மணி உள் ஒளியை பெருக்கி, கண்ணால் பார்த்து - கண்ணிலுள்ள
அக்கினியால் ஐயாயிரம் பேருக்கு ஞானஸ்நானம் வழங்கினார்! இதுவே
நடந்த உண்மை சம்பவம்! அறிவார் அறிவர்! அறிவால் அறிவர்! இயேசுவே
யோவான் கூறிய படி அக்னியால் ஞானஸ்நானம் வழங்கியவர்!

மனக்கதவை திறக்க ?

வஞ்சகனேன் இருந்த மனக்கதவு  திறப்பித்து

நம் மனமே நம்மை எல்லா வினைகளையும் செய்ய  தூண்டி
பாவத்தை சேர்த்து விடுகிறோம். கொடிய வஞ்ச நெஞ்சனாகிவிடுகிறது!
அந்த மனம் இருக்கும் இடம் கண்மணி மத்தியில் ஓட்டையின் முன்!
சவ்வாக! சூட்சுமமாக! மணிக்கதவு என்றால்! கதவாக இருப்பது எது
என்றால் நம் மனமே! அந்த மனக்கதவை திறக்க உள் ஒளி வர வேண்டும்!
நாம் வாசலில் நின்று கதவை தட்டினால் உள்ளே உள்ள வீட்டுக்காரன்
வந்து கதவை திறந்து நம்மை கூட்டி போவன்! இதுவே தியானம்!
எவ்வளவு பெரிய ஞான ரகசியம் இது தெரியுமா ? இந்நூலில்
மட்டுமே வெளிவந்து உள்ளது!
திருவருட்பாமாலை - நாலஞ்சாறு  

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

மனம் கரைந்த அந்த இடம்??

"மனம் கரைந்த அந்த இடம் " அறிந்தவனே மனிதன்! இதை சொல்பவனே
உண்மை குரு! சற்குரு! உணர்த்துபவனே ஞான சற்குரு!

அது நம் கணமணியே! கண்மணி மத்தியில் ஊசி முனை துவாரம்!! அதை
மறைத்தபடி இருப்பதுவே மெல்லிய சவ்வு! திரை! வினை திரை!

அதிலிருந்து வெளிபடுவது தான் மனம்! வினையாற்றும் சூட்சும சக்தியே
மனம்! வினை இருக்கும் வரை மனம் இருக்கும்! வினை இல்லை என்றால்
மனம் இல்லை! வினையை அழித்து விட்டால் மனமே இருக்காது!

வினையை அழிய, கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள் ஒளியை
உணர்ந்து தவம் செய்வதே ஞானிகள் கூறும் இரகசியம்!

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

இணையடி, பொற்கழலடி எது தெரியுமா?

திருவருட் பிரகாச வள்ளலார் கூறியதும் திருவள்ளுவர் கூறியதும்
இந்த உலகில் இதுவரை தோன்றிய திருவாளர்கள் கூறியதும்
வேத புராண இதிகாசங்கள் உரைப்பதும் ஒன்றே ஒன்று தான்!
அது தான் ஞான ரகசியம்! வேறொன்றும் இல்லை! பிறவிப்பிணி
தீர திருவடியை பற்ற வேண்டும் என்பதே!

இறைவன் திருவடி, இணையடி, பொற்கழலடி எது தெரியுமா?
எங்கிருக்கிறது தெரியுமா?  மனிதனாகிய நாம் உலகெங்கும்
தேட கூடாது -கஷ்டப்பட கூடாது என்ற கருணை உள்ளத்தோடு
இறைவன் தன்னை சுருக்கிக்கொண்டு ஊசி முனை அளவு
தீயாக - ஜோதியாக நம் உடலில் கண்ணில் மணியில்
மத்தியில் ஊசி முனை துவாரத்துள் துலங்குகிறான்!
அருட்பெருஞ்ஜோதியான இறைவன் நம் கண்மணியில்
ஒளியாக துலங்குகிறார்!

மனம் இருக்கும் இடம்?

நம் மனந்தான் நம் வினைப்பயனை அனுபவிக்க காரணமாகிறது!
மாயையின் முழு ஆக்கிரமிப்பில் தான் மனம் உள்ளது!

அது வினைக்கு தக்க படி நம்மை ஆட்டிப்படைக்கிறது! நம் மனம் ஓர் அடர்ந்த பெருங்காடு  போன்றது! உள்ளே போக போக விரிந்து கொண்டே போகும்!

இதை இன்னொரு சித்தர் பெருமகனார் ஊசிமுனை காட்டிற்குள் உலாவியே
திரியலாம் வாரீர் என கூப்பிடுகிறார்!? அந்த மாயை சூழ்ந்த காடு
மனமாயை காடு எங்கு உள்ளது தெரியுமா? கண்ணின் முன்னால்!

கண்ணின் கருவிழியின் - கண்மணியின் முன் மெல்லிய ஜவ்வாக
உள்ளது நம் மனம் இருக்கும் இடம் கண்மணியின் முன்பாகவே!

கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு துவாரம் உள்ளது!
அதை மறைத்து கொண்டிருப்பது மாயை திரையான மனத்திரை உள்ளது!

ஊசி முனை ஓட்டையின் உள்ளே பெருங்காடு இருப்பதால் தான்
சித்தர் பெருமகனார் "ஊசி முனை காட்டிற்குள் உலாவியே இருக்கலாம்
பாரீர்! வாரீர்! என அழைக்கிறார்...

திங்கள், 4 ஏப்ரல், 2016

உடலில் பாற்கடல் எங்கு உள்ளது?

காரினமல்கு கடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிடமென்பார்! 

Image result for பாற்கடலை கடை

தேவர்கள் பாற்கடலை கடைந்தார்களாம்! எதற்கு அமுதம் உண்பதற்காக!
அமுதம் உண்பவனே நீடுடி வாழ்வான்! இது புராணம்.
நாம் ஞான விளக்கத்திற்கு வருவோம்?

நம் வெள்ளை விழியே பாற்கடல்! நாம் அமுதம் உண்டு
 இறைவனை அடைய கண்மணியில் வைத்து உணர்ந்து
இருப்பதுவே பாற்கடல் கடைதலாம்! எப்படி? கண்மணி தான் மேரு மலையென நடுவே இருந்து சுழலுமாம்!

கண்மணி சுழல சுழல மேரு மலையை சுற்றிய
வாசுகி பாம்பு தன் விஷத்தை கக்குமாம்!  நம் முன் பிறவி வினையாகிய
கர்மம் தான் அது! நம்மை காக்கும் பொருட்டு சிவன் - கண்மணி ஒளி அதை
அருந்துமாம்!

ஒளி தான் ஒளிபெறுகி தான் நம் பாவமாகிய கர்மதிரை அகலும்!
தொடர்ந்து பாற்கடலை கடைந்தோமானால் - தொடர்ந்து நினைந்து உணர்ந்து 
நெகிழ்ந்து கண்மணி ஒளியை தியானம் செய்தோமானால் அமுதம் கிட்டும்
பருகினால் நாமும் தேவராகலாம் சாகாமலிருக்கலாம் ஞானம் கிட்டும்!

இப்படி நம் நஞ்சாகிய நம் கர்மங்கள் உண்டு தீயில் அழித்து நம்மை காக்கும்
சிவம் -ஒளி நம் உள்ளே தான் கண்மணி நடு உள்ளே நம் சிரநடு உள்ளே
தான் என சம்பந்தர் பெருமான் கூறுகிறார்! இது ஞானம்.

Popular Posts