புதன், 30 மார்ச், 2016

பிரணாயமம் செய்கின்றவர் அறிந்து கொள்ள வேண்டியது

நாடிகள் பத்தும் நலந்திழல் வாயுவும்
ஓடிய காலி லொடுங்கி யிருந்திடுங்

நம் உடலில் முக்கியமான நாடிகள் பத்து .
முக்கியமான வாயுகள்  பத்து. நாடிகளுள்
வாத நாடி பித்த நாடி சிலேத்துமநாடி இவை மூன்றும்
மிக முக்கியமானவை. இம்மூன்று நாடியும் சீராக இருந்தாலே
உடல் ஆரோக்கியமாக திகழும். வாயுக்களில் பிராணன்
அபானன் இரண்டும் முக்கியமானவையாகும்.

இவைகள் ஓடிய காலில் ஒடுங்குமாம்! எப்படி? கால்- திருவடி - நம் கண்கள்.
ஓடிய கால் என்றால்? நம் கண்மணி ஒளி உள் ஓடுமல்லவா? இரு
கண்ணும் உள் ஓடி சென்று முட்டும் இடமே அக்னிகலை! அப்படி
உள்  ஓடும் ஒளிக்களைகளிலே ஒடுங்கி விடும் அவை!

நாம் வாயுவை பிடிக்க வேண்டாம்! கண்மணி ஒளியை பெருக்கினாலே போதும் வாயு அதிலே அடங்கி விடும். பிரணாயமம் செய்கின்றவர் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமானது இவ்விஷயம்! கண்மணி ஒளியை பற்றினாலே போதும்!

வெள்ளி, 25 மார்ச், 2016

சன்மார்க்க நெறி நடக்காதவரைக்கும் துன்பமே

ஆயத்துள் நின்ற அறுசமயங்களுங்
காயத்துள் நின்ற கடவுளை காண்கிலர்
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
பாசத்தில் உற்று பதைக்கின்ற வாறே

வெறும் சடங்கு சம்பிரதாயங்களை கூறும் ஆயக்கட்டுகளான
அறு சமய நூற்கள் உலக மக்களுக்கு பிரயோஜனம் இல்லை!
நேரம் போகாதார்கள் பேசலாம் படிக்கலாம்! இது போன்ற
இன்றைக்கும் உருப்படாத சாமியார்கள் பலர் உள்ளனர்! கேடு
கெட்ட ஆசிரமங்கள் பல உள்ளன! கஷ்டம்!

காயமாகிய உடலில் நம் உயிராக இருப்பது அந்த இறைவன், பேரொளிதான்
நம் கண் வழி தவம் செய்துதான் காண முடியும் என்பதை அறியாதவர்கள்
அவர்கள்! கண்ணிருந்தும் குருடர்களே!

அப்படிப்பட்ட அறிவிலிகள் மாயை எனும் மும்மல சகதியில்
விழ்வர்!  வினையால் அலை கழிக்கப்படுவர்! வீடு வாசல் மனைவி
மக்கள் என்ற பாசம் வைத்து நாசம் அடைவார்!

அறியாமையால் உழலும் அவர் பதைபதைப்புடன் பரிதவிப்புடன் தான் வாழ்வார்! நிம்மதி என்பதே இருக்காது!  உண்மை ஞானம் அறியாதவரைக்கும் சன்மார்க்க நெறி நடக்காதவரைக்கும் துன்பமே, சோகமே அவர் வாழ்க்கை!

திங்கள், 14 மார்ச், 2016

நமசிவய

தமிழ் மண்டலம் ஐந்து! 'ந' 'ம' 'சி' 'வ' ய' பஞ்சாட்சரத்தை
பஞ்ச பூதமானவற்றை நமது உடலில் துலங்குவதை
அறியலாம்.
ந அடிவயிறு
ம  வயிறு
சி நெஞ்சு
வ தொண்டை
ய சிர நடு  என ஐந்து மண்டலங்களாக உள்ளது.
நாம் கண்மணி ஒளியை பெருக்க, அது உடல்
முழுதும் இந்த உடலில் ஐந்து மண்டலங்களுக்கும் தாவி
ஊடுருவி எங்கும் ஒளியாய் துலங்கும்! ஞானம் பெறுவார்!

சனி, 12 மார்ச், 2016

குருவை பெறுவது எவ்வளவு முக்கியம்

கிருஷ்ண பகவானும் ஸ்ரீ ராமனுமே  குருவை தேடிபோய் உபதேசம் பெற்றார்கள் என புராணம் படித்திருக்கிறோமே? அவதாரம் கூட குருவை அவசியம் பெறவேண்டும் என நமக்கு உணர்தத்தானே! அவதாரம் கூட குருவை பெறவேண்டும் என்றால் நாம் சாமானியன் குருவை பெறுவது எவ்வளவு முக்கியம்! தகுந்த ஆச்சாரியன் மூலன் உங்கள் நடுக்கண்ணை திறக்கபெற்று கொள்வது நலம்! என வள்ளல் பெருமான் அறிவுறுத்துகிறார் அல்லவா? விரைந்து ஞான சற்குருவை பணிந்து ஞானபதேசம் பெருக! குருவில்லாமல் யாரும் இறைவனை அடைய முடியாது!


குரு உபதேசம் தீட்சை பெற்றாலே தெளிவு பெறலாம்!? குரு உபதேசம்
தீட்சை பெறாதவர்களே தெளிவில்லாதவர்கள்! அறிவில்லாதவர்!
சீடனாகாதவன் தெளிவில்லாதாவன் முட்டாள்! முட்டாள் எப்படி
சிவனை இறைவனை அறிவான்! குரு உபதேசம் பெற்று சிந்தை
தெளிந்து திருவடியறிந்து தவம் செய்து சீவனே சிவன் அவனே நம்
உள் ஒளியென உணர்ந்தாலல்லவா பிறவிப்பிணி தீரும்! இந்த
தெளிவில்லா தவன் இனியும் பிறப்பான்! சிந்தை தெளிய சீடனாகு!

வியாழன், 10 மார்ச், 2016

தவம் எப்படி செய்வது?


 


தவம் கண்ணை திறந்து கொண்டு தான் செய்ய வேண்டும்.அரை கண்ணாவது திறக்கணும். முழு கண்ணையும் திறந்தால் "பௌர்ணமி திருஷ்டி " என்று பெயர். அரை கண் திறக்கும் போது "பிரதம திருஷ்டி" என்று பெயர். கண்ணை முழுமையாக மூடினால் "அமாவாசை திருஷ்டி " என்று பெயர்.
 Image result for பௌர்ணமி
தவம் செய்யும் போது முதலில் கண்ணை மூடி குருவை வணங்கி விட்டு "பௌர்ணமி திருஷ்டி "க்கு வர வேண்டும். பௌர்ணமி திருஷ்டியில் இருந்து கண்மணி உணர்வை பெருக்கி கொண்டு பிரதம திருஷ்டிக்கு வந்து அப்படியே 
எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் இருக்காலாம். பிரதம திருஷ்டியிலயே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம் என்று சொல்லாமல் சொல்லி உணர்த்தினவர் தான் தட்சிணாமூர்த்தி. 
சும்மா இரு என்பது இது தான்.
இவ்வாறு சும்மா இருப்பது மட்டும் தவமல்ல. இது போன்று நம் அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொன்றும் தவமாக வேண்டும். 

நீதியாக நெறியாக 
ஒழுக்கமாக 
பண்போடு 
பக்தியோடு 
அன்போடு 
பணிவோடு 
தெளிவோடு 
நிதானமாக 
ஒவ்வொரு செயலிலும் 
பார்த்து பார்த்து செயல்பட வேண்டும். 
அப்போது தான் தவம் விரைவில் கைகூடும். தவம் மட்டும் 1 மணி நேரம் செய்தால் போதாது? 24 மணி நேரமும் நம் ஒவ்வொரு சொல்லும் செயலும் தவத்தை பிரிதிபலிப்பதாய் விளங்க வேண்டும். 
அப்படி பட்டவனே ஆன்ம சாதகன்.

-ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா

என்ன பயிற்சி செய்ய வேண்டும்?


இறைவன் சொல்லவதை கேட்பீர்களா? அல்லது
கண்ட கண்ட சாமியார்கள் சொல்வதை கேட்பீர்களா?

இந்த உலகத்திற்கே முதல் குரு யாரு? தட்சிணாமூர்த்தி. தட்சிணாமூர்த்தி உடைய கோலம். அந்த இருப்பு அதுவே உபதேசம். நாம் செய்ய வேண்டியது. நமக்கு சொல்லமால் சொல்வது.

தட்சிணாமூர்த்தி உடைய கோலம் அவர் நிலை எப்படி என்பதினை இந்த ஒரு பாடலில் பரஞ்சோதி மகான் “திருவிளையாடல் புராணத்தில்” எழுதி உள்ளார். என்ன என்று பார்க்கலாம்.

பரஞ்சோதி மகான் .
“கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறங்கம் முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுவாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டியே
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத்தொடக்கை வெல்வோம்”
-திருவிளையாடற் புராணம் -

சனகாதி முனிவர்களுக்கு முன்னாடி வந்து தட்சிணாமூர்த்தி உட்கார்ந்து இருக்கிறார். ஒரு கையில் அக்னி, இன்னொரு கையில் உடுக்கை. இறைவன் எப்படி இருக்கார் என்பதை விளக்குவது அவரை எப்படி அடைய முடியும் என்பதை விளக்குவது தான் தட்சிணாமூர்த்தி உடைய கோலம்.
இறைவன் எப்படி இருக்கார் என்றால் ஒளி ஒலி. இது தான் விஞ்ஞானனதிற்கும் பேஸ் (அடிப்படை). ஆன்மிகத்திற்கும் ஒளி தான் பேஸ் (அடிப்படை).

ஒளியும் ஒலியுமாக இறைவன் இருக்கிறார். சக்தி சிவமாக உயர்ந்திருக்கிறார். அப்படி ஒளி ஒலியாக இருக்க கூடிய இறைவன் அதை பத்தி தான் கையில் ஏடு வைத்து கொண்டுள்ளார். அதாவது எல்லா வேதங்களும் சொல்லுவது இந்த விஷயம் தான். இறைவன் ஒளியும் ஒலியுமாக இருக்கிறான்.

சரி அந்த இறைவனை எப்படி தெரிந்து கொள்வது. இன்னொரு கையில் சின் முத்திரை. சின் முத்திரையை பிடித்து கொண்டால் இறைவனை பிடித்து கொள்ளலாம். அதாவது வேதங்களில் சொல்லப்பட ஒளியும் ஒலியுமான இறைவன் அவனை பிடிக்க வேண்டும் என்றால் சின் முத்திரையை பிடித்து கொள்ளுங்கள். இதை வாய் விட்டு சொல்லவில்லை. அவருகைய கோலம் – இருந்த கோலம் உணர்த்தியது. சின்முத்திரை என்றால் என்னது?

சின்முத்திரை எப்படி வைக்க வேண்டும்? பெருவிரலால் ஆள்காட்டி விரலின் நுனியை தொடுவது பரத நாட்டிய முத்திரை. சின்முத்திரை அல்ல அது. சின்முத்திரை என்பது ஆள்காட்டி விரலால் பெருவிரலின் மத்திய கோடினை தொடுவது. இது தான் உண்மையான சின் முத்திரை.

சின்முத்திரையை பிடித்தால் இறைவனை தெரிந்து கொள்ளலாம். இதை சொல்லாமல் இருந்து காட்டி உள்ளார் தட்சிணாமூர்த்தி. சின் முத்திரையை பிடித்தால் இறைவனை தெரிந்து கொள்ளலாம். நிறைய பேர் இந்த சின் முத்திரையை கையில் பிடித்து கண்ணை மூடி கொண்டு தவம் செய்வர். அப்படி இருந்தால் ஒன்னும் கிடைக்காது. எத்தனை ஆயிரம் வருடம் இருந்தாலும் ஒரு புரியோசனமும் இல்லை. அப்போ சின் முத்திரையோட பொருள் என்ன வென்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். சின் முத்திரையை பிடித்தால் இறைவனை தெரிந்து கொள்ளலாம் எப்படி?

“பரசிவம் சின்மயம் பூரணம் ” என்று வள்ளல் பெருமான் பாடியிருக்கிறார். இறைவன் சின்மயமாக இருக்கிறார். சின்முத்திரையை பிடித்து கொள் என்றால் சின்முத்திரை அளவான நம் கண்ணை பிடித்து கொள் என்பதே. நமது கண்ணின் அளவு பெருவிரலின் நுனியில் இருந்து நாடு கொடு வரை. இவ்வாறு சின்முத்திரையை பிடித்து கொண்டு நம் கைகளை பார்த்தல் அது கண் போல் இருக்கும்.

சின்முத்திரையை பிடித்து கொள் என்றால் சின்முத்திரை அளவான நம் கண்ணை பிடித்து கொள் என்று அர்த்தம். சொல்லாமல் சொன்னவரை – தட்சிணாமூர்த்தி சொல்லவில்லை. உணர்த்தி காட்டி இருக்கிறார். புரிந்து கொள் என்று சொல்லி இருக்கிறார். சனகாதி முனிவர்கள் புத்திசாலிகள் அதனால் புரிந்து கொண்டார்கள்.

அதாவது நாம் கடவுளை நினைத்தோம், ஒரு உருவம் வந்தது அதன் அமைப்பு அதன் மூலம் உணர்த்த பெற்றது இவைகளை புரிந்து கொண்டார்கள் சனகாதி முனிவர்கள். புரிந்து கொண்டு இறைவனை அடைந்தார்கள்.
சரி சின்முத்திரையை பிடி என்றால் கண்ணை பிடித்து கொள்ள வேண்டும் என்று பார்த்தோம்.

சரி கண்ணை எப்படி பிடித்து கொள்வது?
ஒளியும் ஒலியுமான இறைவன் கண்களில் துலங்குகிறான். அப்போ அந்த கண்களில் உள்ள ஒளியை அறிந்து கொள். குரு மூலமாக உணர்ந்து கொள். தவம் செய் இறைவனை அடைந்து விடலாம். தட்சிணாமூர்த்தி வந்து வாய் விட்டு உபதேசம் செய்திருந்தால் அது பேசுவது அல்லவா. பேசவில்லை அவர். அப்போ நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதினையும் உணர்த்தினார். சும்மா இருந்தார். அப்போ கண்ணைபிடிக்கணும் சும்மா இருக்கனும் என்பதினை சொல்லமால் சொல்லி விட்டார்.

சரி எப்படி கண்ணை மூடி கொண்டா இருக்கணும்!? கண்ணை திறந்து கொண்டு இருக்கனும். அரை கண்ணாவது திறக்கணும். முழு கண்ணையும் திறந்தால் “பொவுர்ணமி திருஷ்டி “ என்று பெயர். அரை கண் திறக்கும் போது “பிரதம திருஷ்டி” என்று பெயர். கண்ணை முழுமையாக மூடினால் “அமாவாசை திருஷ்டி” என்று பெயர்.

தவம் செய்யும் போது முதலில் கண்ணை மூடி குருவை வணங்கி விட்டு “பொவுர்ணமி திருஷ்டி “க்கு வர வேண்டும். பவுர்ணமி திருஷ்டியில் இருந்து கண்மணி உணர்வை பெருக்கி கொண்டு பிரதம திருஷ்டிக்கு வந்து அப்படியே எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் இருக்காலாம். பிரதம திருஷ்டியிலயே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம் என்று சொல்லாமல் சொல்லி உணர்த்தினவர் தான் தட்சிணாமூர்த்தி.

“சும்மா இரு” என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார். “சொல்லாமல் சொன்னவரை” – உணர்த்தி காட்டி உள்ளார், இருந்து காட்டி உள்ளார். “இருந்ததனை இருந்தபடியே இருந்து காட்டிய”
இது தான் தட்சிணாமூர்த்தி உடைய கோலம்.
அவரை நாம் “நினையாமல் நினைக்கிறோம்”.

“நினையாமல் நினைப்பது” என்பது எப்படி? ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கிறது. நினையாமல் நினைக்கணுமாம்! நினைக்கிறோம் என்றாலே எண்ணங்கள் வந்து விடுகிறது அல்லவா? நினைவு என்றால் எண்ணம் தானே. அப்போ எண்ணம் வந்தால் சும்மா இருக்க முடியாதே!? புரிந்து கொண்டீர்களா! நினைப்பு அப்படி என்றால் ஒரு எண்ணம் தானே. எண்ணம் என்று ஒன்று வந்து விட்டால் அப்புறம் எப்படி சும்மா இருப்பது? எண்ணம் செயல் படுமே. எண்ணம் விரிவடைந்து கொண்டே போகும். அப்புறம் எப்படி செயல் படுவது?

“நினையாமல் ” இதில் தான் சூட்சுமம் இருக்கிறது. அந்த ஒரு வார்த்தைக்கு எவ்வளவு பொருள் இருக்கிறது பாருங்கள்! “நினையாமல் நினைக்கணும்” – அப்போ நினைக்க கூடாது. ஆனால் நினைக்கணுமாம். எதை? இப்போ நாம காலில் அடிபட்டு விட்டது என்று வையுங்கள் அதாவது கால் விரல் கிழிந்து இரத்தம் வருகிறது. அப்போ வேறு யாரவது பேசினாலோ அல்லது வேறு எதிலோ நமது மனம் போகுமா!? போகாது. எங்கே வலி இருக்கோ அந்த இடத்தில் மட்டும் தான் நினைவு இருக்கும். நாம் அந்த இடைத்தை நினைக்கவா செய்கிறோம்? இல்லை! உணர்கிறோம். அந்த வலியை உணர்கிறோமே தவிர நினைக்கவில்லை. “நினையாமல் நினைப்பது” என்பது இது தான்.

மெய்பொருளில், திருவடியில் கண்களில் குரு கொடுக்கிற அந்த தீட்சை என்பது அந்த உணர்வு தான். அந்த உணர்வை நீங்கள் – உணர்வை மட்டும் பிடித்து கொண்டால் போதும். நீங்கள் நினைக்க வேண்டாம். கண் இருக்கு , மெய்பொருள் இருக்கு , பாப்பா இருக்கு அதை எல்லாம் நீங்கள் நினைக்க வேண்டாம். அதில் உணர்வு இருக்கு பார்த்தீர்களா அந்த உணர்வினை மட்டும் பிடித்து கொண்டால் போதும். இது தான் நினையாமல் நினைப்பது.

தட்சிணாமூர்த்தி உடைய கோலம் அமைப்பே இது தான். ஞானம். இதை இந்த உலகத்திலே ஒருத்தர் கூட சொல்லி கொடுக்க வில்லை. தங்க ஜோதி ஞான சபை தான் இதை சொல்லி கொடுக்கிறோம். வேறு எங்காவது சொல்லி கொடுக்கிறார்களா? வேறு எங்காவது நீங்கள் கேட்டு உள்ளீர்களா? சரி இப்போ நான் சொன்னது எல்லாம் சரி தானா? நான் சொன்னது எல்லாம் சரி தான் என்பதை முருக பெருமான் வந்து அக்செப்ட் பண்றாரு. எப்படி? சனகாதி முனிவர்களுக்கு தட்சிணாமூர்த்தியாக வந்த இறைவன் அருணகிரி நாதருக்கு முருக பெருமானாக வருகிறார். என்ன உபதேசம் செய்தார்!?

“சும்மா இரு சொல் அற என்றலுமேஅம்மா பொருள் ஒன்றுமே அறிந்திலனே.”
“பெம்மான் முருகன் பிறவான் இறவான்”.
தட்சிணாமூர்த்தியாக வந்து உலகத்திருக்கு உணர்த்தின “சும்மா இரு” ஞானத்தினை , அருணகிரி நாதருக்கு முருக பெருமான் நேரடியாகவே வந்து “சும்மா இரு” என்று சொல்லி விட்டு போய்விட்டார். அப்போ சரி தானே. அப்போ நான் சொல்லவில்லை இறைவனே சொல்லி இருக்கிறார். இது தான் உண்மை.

தட்சிணாமூர்த்தியாக வந்து உலகத்திற்கு உணர்த்தியதை முருக பெருமானாக வந்து உபதேசம் செய்து விட்டு’ போய்விட்டார். இன்று எவ்வளவோ ஆசிரமம் , எவ்வளவு குருமார்கள் என்னவெல்லாமோ சொல்லி விட்டு திரிகிறார்கள். அங்கு இருக்கிறான் இறைவன், இங்கு இருக்கிறான் இறைவன் அதே பண்ணுக
இதே பண்ணுங்க மூச்சை பிடியுங்கள் வாசி யோகம் பண்ணுங்க அப்படி என்னவெல்லாமோ சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.
தட்சிணாமூர்த்தியாக வந்து உலகத்திற்கு சொன்னாரு முருக பெருமானா வந்து அதனை உறுதி படுத்தினாரு.

கடவுள் சொன்னதை பின்பற்றுவீர்களா அல்லது கண்ட கண்ட சாமியார்கள் சொன்னதை பின்பற்றுவீர்களா!?

நீங்களே முடிவு செய்யுங்க.

ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா தைபூச உபதேசம் 2014
முழு உரை படிக்கச் / பார்க்க இங்கு கிளிக் செய்யவும் (http://tamil.vallalyaar.com/?p=3478)

புதன், 9 மார்ச், 2016

வாசியோகம்


வாசியும் ஊசியும் பேசி வகையினால்
பேசியிருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம் எளிதாமே.

வாசி வாசி என்று பேசி பயன் இல்லை! ஊசிமுனை என
தலை உச்சியியை பற்றி பற்பல யோகம் எதுவும் பிரயோஜனம் இல்லை!
அதைப்பற்றி பேசி பிதற்றி திரிகிறார்கள்! அதனால் ஒரு பயனும் இல்லை
என்று திருமூலர் திட்டவட்டமாக கூறுகிறார்! ஆசை கண்டதெல்லாம்
வேணுமென்ற ஆசை! அன்பு பாசம் பந்தம் என்று சொந்த பந்தங்களை
வீடு மனை தோட்டம் சொத்து சுங்கங்களை கட்டிஅழுதல் இதை எல்லாம் விட்டுவெளியே வா! உலகத்தை துச்சமாக கருதியிரு! புற உலக வாழ்வை
துறந்தவனே அகத்தில் ஈசன் இருப்பதை உணர முடியும்!

எல்லாவற்றுக்கும் ஆசைப்படு என்று சாமியார் சொல்கிறார்!! மடத்தனமான உபதேசம் இது! எல்லா ஆசையையும் விடு என்பதேபுத்தர் உபதேசம்! எல்லா ஞானிகளின் உபதேசம் இதுதான்! இதுவரை இவ்வுலகில் தோன்றிய ஞானிகள் யாரும் ஆசிரமம் கட்டவில்லை! பல நூறு ஏக்கர் சொத்து சேர்க்க வில்லை!
மக்களுக்காக வாழ்ந்தார்கள்! மக்களை ஞான பாதையில் கூட்டி
சென்றார் கள்! அவர்கள் தான் மெய்ஞானிகள்! இப்போதுள்ள சாமியார்கள்
100 ஏக்கரில் ஆசிரமம் ஆடம்பர சாமியார்கள் கோடியில் புரளும்
குட்டி ராஜாக்கள்! சொல்வது யோகம் மட்டுமே! ஞானம் இப்போது உள்ள
சாமியார்கள் யாருக்கும் தெரியாது!  எப்படி நாடு உருப்படும்! யாரிடம் சொல்ல?

குடி குடியை கெடுக்கும். புகைப்பதால் பபுற்றுநோய் வரும்.போதைப்பழக்கத்தால் கெட்டுப்போவாய் என உபதேசம் பண்ணும் அரசாங்கமே அனைத்தையும் விற்பனை செய்கிறது?! மூவாசை விட்டொழி என்றும் இறைவனை அடைய தூய நல்லொழுக்கத்தை கடைபிடி - சுத்த சைவ உணவை உட்கொள் என போதிக்க வேண்டிய சாமியார்கள்! மண்ணாசையால் ஏக்கர் கணக்கில் ஆசிரமம் பொன்னாசையால் கோடி கோடியான பணம், பெண்ணாசையால் தவறான செயல்பாடுகள்,நீ எப்படி வேண்டுமானாலும் இரு என்ஆசிரமத்தில் சேர்ந்தால் போதும்  என்கிறார்கள்!

நீ மாமிசம் மீன் முட்டை சாப்பிடலாம் யோகா மட்டும் செய் என ஆசிரமத்தில்
கூட்டம் சேர ஆட்டம் போடுகிறார்கள்! அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி! அரசாங்கம் போதையை வியாபாரம் செய்கிறது. சாமியார்கள் மேலும் பல வழியில் கெட காரணமாகிறார்கள்!போலிச்சாமியார்கள் ஒழிய வேண்டும்! நல்ல ஆன்மீக பெரியோர்கள் ஆட்சிக்கு வரவேண்டும்!

மக்கள் நல்வாழ்வு வாழ நன்னெறி நடக்க இறைவா நீதான் அருள் புரிய வேண்டும்! இந்த நாட்டை நீ தான் காப்பாற்ற வேண்டும்!

சனி, 5 மார்ச், 2016

பரம்பொருளே தன் ஜீவன் - எப்போது உணர்வது?

பற்றறப் பற்றிற் பரம்பதி யாவது
பற்றறப் பற்றிற் பரனறி வேபரம்
பற்றறப் பற்றினிற் பற்றவல் லோர்கட்கே
பற்றறப் பற்றிற் பரம்பர மாகுமே.



ஒரு சிறிதும் பிரிவிலாது உலகப்பற்று சிறிதும் இல்லாது
நம் திருவடிகளை மட்டும் பற்றினால் அதுவே பரம்பொருள்
நம்பதி என அறிந்து கொள்ளலாம்! அங்ஙனம் புறப்பற்று நீங்கி
அகப்பற்று ஒன்றே சதா காலமும் கொண்டு சாதித்தால்
உள் இருக்கும் பரமே ஒளியே , அறிவே நாம் எனவும் , அதுவே சாட்சாத்
பரம் பொருள் எனவும் அறிந்து கொள்ளலாம்!அப்படி பற்றற
பற்றுபவர்க்கே திருவடியை பற்றுவோர்க்கே வேறு பற்றின்றி திருவடி
ஒன்றையே பற்றினால் பிரபஞ்சமெங்கும் நிறைந்த பரம் பொருளே
தன் ஜீவன் என்பதை உணர்வான்! அறிவான்! உய்வான்! 

செவ்வாய், 1 மார்ச், 2016

கயிலாயம் போக வழி

மனந்திருந்தி இறைவனை நாடும் மாந்தருக்கு நல்ல செழுமையான
இடமான கண்மணியில் திருவாகிய இறைவன் சிவந்த மலர் போன்ற
கண்ணாக அதுவே இறைவன் நமக்கு வழங்கிய சீர் ! கண்ணிலே
இறைவன் ஒளியாக புள்ளி வடிவிலே இருப்பதை நினைந்து அவனே
என்  தலைவன் என் இறைவன் என உணர்ந்து நினைந்து நினைந்து
தவம் செய்தால் பரம்பொருள் அருள் கிட்டும்! அது எப்படிப்பட்ட இடம்??




கடல் போன்ற கண்கள் அதிலே அலைபோன்ற ஓயாத எண்ணமுடைய
மனம்! மனம் உடைய கண்ணே அலைகடல்! அதனுள்ளே கண்மணி யினுள்ளே நின்று பொருந்த வேண்டும். பொருத்த வேண்டும், சேரவேண்டும்! அப்படி சேர்ந்தால் தான் உள்புகுந்து சிவன் இருக்கும் கயிலை அடையலாம்!
கயிலாயம் போக வழி இது என்கிறார் மாணிக்க வாசகர்.

திருவுந்தியார்


சிவபெருமானின் திருவிளையாடற்களை, பிரதாபங்களை கூறி பாடியாடும் மகிழ்ந்தாடும் பாடல்கள்! இங்கு ஞான நிலைகளே மறைவாக சொல்லப்படுகிறது!

வளைத்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா று ந்தீபற
வில் வளைந்தாலே அம்பு எய்த முடியும்!?வில்லிலே அம்பை
வைத்து எப்படி விடுவார்கள்! வில்லிலே கட்டப்பட்ட நாண் -கையிற்றை
பின்னாலே இழுப்பர்!அப்போது தான் அம்பு விடும்போது முன்னால் வேகமாக
போகும்! அது போல் நம் இரு கண் நாண். உள்ளே அக்னி கலையில்  சேரும்போது சக்தியுடன் அம்பு போல வளைத்தால் விளையும் பூ என்கிறார்! கண்மலர் ஒளியால் ஒளி மிகுவதால் விளையும்! சல்லென பாயும் ஒளியால் முன் நிற்கும் முப்புரம் - மும்மலத்திரை எரிந்து போகும்! இது தான் ஞானம்! இதற்க்கு எது காரணம்!? உந்தீ பற உள் - தீ - பற்றி எரிந்து பறந்து வந்து மும்மலத்திரையை எரிக்கணும்! எல்லாமே
வெந்து சாம்பலாகணும் மும்மலம்  அற்றாலே பிறவிப்பிணி நீங்கும்!

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே மும்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற

முப்புரம் எரித்த சிவன் கையில் இரண்டு அம்பு இல்லை!
ஏகம்பமாய் ஒரே- நீண்ட - கம்பம் போன்று ஒளி பெருகியவனாய்
இருக்கும் சிவம் தன்கையில் ஒரு அம்பே வைத்துள்ளார்! நம் இருகண்களே 
வில்! உள் அக்னி கலையே  வில் நாணை பின் இழுத்து சேர்க்கும் இடம்!
நாண் பின் குவியும் இடம்! அந்த ஓர் அம்பே, ஓரம்பே முப்புரம் எரித்தது!
சிவன் புன்னகைத்தார்! என்பது  கண்மணி வாய் திறந்து ஒளி பிறந்தது
மலம் எரிந்தது ஞான அனுபவமே!

பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனை

பார்ப்பது - பார்ப்பது எது கண் தானே! அந்த கண்ணின் பதி -
தலைவன் கண்ணிலே பதிந்திருப்பவன் சிவம் தானே! ஒளிதானே !
அந்த சிவத்தை பகைத்த தக்கனை அழித்தார் சிவமே! சிவத்தை
தூஷித்த தக்கன் சிவத்தாலே அழிந்தான்! நாம் சாப்பிடும் ஆகாரம்
சத்தாகி அவிப்பாகமாகி நம் ஆவியோடு சிவத்தோடு சேரும்! இல்லையேல்
நாம் சவம்!

திரு
               வாசக மாலை
மணி  

Popular Posts