Thursday, December 1, 2011

தேக வேதியியல்

தேக வேதியியல்

சாகாகலை குறிப்பாக தமிழ் நாட்டுக்கு உரியது.

* ஞான சம்பந்த பெருமான் நல்லூர் பெருமண திருகோவில் மூல தனத்தில்
   எழுந்த ஜோதியில் மறைந்தார்.

* அப்பர் பெருமான் புகலூர் திருக்கோவில்

* சுந்தரர் வெள்ளை யானையின் மீது கயிலைக்கு எழுந்தருளி ஆகாச வீதியில் மறைந்தார்.

* மாணிக்க வாசக பெருமான் தில்லை சிற்சபைக்குள் புகுந்து சிதாகாச வெயில் கலந்தார்.

* வள்ளல் பெருமான் பூட்டிய அறைக்குள் இருந்து ஜோதி மயமானார்.

* வைசணவ ஆழ்வார்களில் சிலர் இந்த நிலையை பெற்று இருக்கிறார்கள் .

தேவாரத்தை விட திருவாசகத்தில் மரணமில்ல பெருவாழ்வு பற்றி கருத்துக்கள் இருக்கிறது.

சாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே ஆமா றருளிய அருட்பெருஞ்ஜோதி

சாமாறு - சாகும் நெறி - உயிர் உடம்பை விட்டு பிரிதல், உடம்பு பிணமாக வீழ்தல்,மண்ணுக்கோ ,தீய்க்கோ இறையாதல்.

ஆமாறு- ஆம் நெறி - சாகாமல் இருக்கும் நெறி.

அனுபவங்கள் - உயிர் அனுபவம், அருள் அனுபவம், சிவ அனுபவம்
உருவங்கள் - அன்புருவம் அருளுருவம் இன்புருவம்
தேகங்கள் - சுத்த தேகம் பிரணவ தேகம் ஞான தேகம்

இதன் பயனாக பெரும் சித்திகள் மூன்று
சித்திகள் - கர்ம சித்தி யோகா சித்தி ஞான சித்தி

நாம் இந்த சித்திகளை பெற இருள் மல நிலையில் இருந்து நாம் நீங்கி , பின் அன்புருநிலையிலும் பின் அருளுரு நிலையிலும் பின் இன்புறு நிலையிலும் நம்மை செம்மை படுத்த இறை நெறியில் கலப்பதே பேரின்ப நெறியாகும்.

இந்த உடம்பை ஞானகுருவின்
உபதேசப்படி சாதனையில் ஈடு படுத்தினால் இந்த உடம்பே சாகா உடம்பு.

இதனுடைய நுட்பத்தை குரு சீட முறையில் விளக்கம் செய்ய கேட்டு கொண்டாலன்றி பயன் ஏதும் இல்லை.

"ஒருமையுடன் உனது திருவடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்". வள்ளல் பெருமான். இந்த உறவே நமக்கு இருளில் இருந்து ஒளிக்கு அழைத்து செல்லும்.


உயிரையும் உடம்பையும் செயல் பட வைப்பது அன்பே. அன்பின் செயல் படு உயிரின் செயல்பாடு என உணர்தல் வேண்டும்.

- From PS MANIAN AYYA  Book.

2 comments:

  1. அன்புள்ள நண்பரே ,
    வணக்கம் . மிக நல்ல பதிவு.காலம் கூட்டுவித்தால் அனைத்தும் சாத்தியமாகும் .
    மிக்க நன்றி

    ReplyDelete
  2. TV காலம் எப்பொழுதும் இருக்கும்... நாம் தான் முயற்சி செய்ய வேண்டும்.. :)

    ReplyDelete

Popular Posts