வெள்ளி, 31 ஜூலை, 2015

குரு பூர்ணிமா





நம்மை இறைவனிடம் சேர்பிக்கும் குருவுக்கு
உலகையே கொடுத்தாலும் ஈடு ஆகாதே!

இறைவன் திருவடி இது என்று
இரகசியத்தை ஒரு பாமரன் கூட
புரியும் அளவு வெளிப்படுத்தி
திருவடியில் மனதை நிலை நிறுத்த
தீட்சை கொடுத்த குருவுக்கு என்ன
கைமாறு செய்வது?

ஞான தானம்.

திங்கள், 27 ஜூலை, 2015

சும்மா இரு - முடிந்த முடிபான ஞான நிலை

இறைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றார். அப்படி எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை அடைவதற்கு நாம் காடு மலை
கோயில் அபிசேகம் ஆராதனை மந்திரம் சொல்வது யாகம் போன்றவற்றை செய்து கொண்டிருக்கிறோம்.

இவை எல்லாம் ஆரம்ப படிநிலைகளே தவிர முடிந்த முடிபான
ஞான நிலையை தெரிந்து கொள்ள இயலாது.

இறைவனை காண்பதற்கான ஒரே வழி ஞான தவம் செய்து தன்னை உணர்வதுதான்! இது தவிர வேறு வழி இல்லை! தன்னை அறிவது இன்னும் எளிமையாக சொல்வது என்றால் "நான் யார்"? என்று தெரிந்து கொள்வது தான்! நான் யார் என்பதை நீ சும்மா இருந்துதான் தெரிந்து கொள்ள தவிர வேறு எது செய்தும் உணர முடியாது!

எல்லா ஞானிகளும் சித்தர்களும் சும்மா இருந்துதான் இறைவனை கண்டார்கள்!

சொல்லும் பொருளும் அற்று சும்மா இருப்பதற்க்கே
அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே! - தாயுமானவர்


இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்றொண்டு வருமோ அறியேன் எங்கோவே துன்று மல வெம்மாயை அற்று
வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்! - வள்ளலார்

ஆதிகுரு தட்சினாமூர்த்தி சனகாதி முனிவர்களுக்கும்
ஞான பண்டிதன் முருகன் அருணகிரி நாதருக்கும்

ராமலிங்க அடிகளாரும் மற்றும் அனைத்து ஞானிகளும்
உலக மக்களுக்கு கருனையோடு சொன்னது
சும்மா இரு

சும்மா இரு என்பது தன் கடமைகளை எல்லாம் செய்து கொண்டே
குரு கூறிய உபதேசத்தின் படி இறைவன் திருவடிகளாகிய
இரண்டு கண்களில் உணர்வோடு இருபதுவே.

இந்த சும்மா இரு என்கின்ற ஞான தவத்தை பற்றி ஆன்மீக செம்மல் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் புத்தகங்கள் DVD மற்றும் இனைய தளம் மூலமாக மெய்ஞான இரகசியங்களை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

உபதேசம் மற்றும் தீட்சை   பெற 
www.vallalyaar.com

திங்கள், 13 ஜூலை, 2015

நந்தி = நம் தீ


அறிவு வடிவென் றறியாத என்னை
அறிவு வடிவென் றருள் செய்தான் நந்தி
அறிவு வடிவென் றருளால் அறிந்தே
அறிவு வடிவென் றறிந்திருந் தேனே






நந்தியம் பெருமான் - நம் தீயான அந்த பரம்பொருள் பேரொளி!
அன்புமயம்! அறிவு மாயம்! அறிவே வடிவாகி ஒளிர்வதே நம் ஆன்மா!
அதை எனக்கு அறிவித்தது என் நந்தி! நந்தியை அடைந்தால் அறிவு
துலங்குவது அதனால்தான்! ஒரு கணப்பொழுதில் எல்லா ஞானமும்
நம் உள் ஒளியை அறிவு வடிவை அடைவதால் பெறலாம் என வள்ளலாரும்
கூறுகிறார் ! இதை அறிவித்து நந்தி ஞான சாதனை செய்ய நமக்கு
அருள் புரிந்தாலே நம்மால் அறிய முடியும்!ஞான சற்குருவிடம் மெய் பொருள்
உபதேசம் பெற்று நந்தியை அடைந்து அவருளாலே நானும் அறிவு ஞான
சொரூபம் என அறிந்து கொண்டேன்! அறிவுக்கு அழிவில்லை! அறிவிற்கு
ஒளிக்கு அறிவே ஒளியே ஆதாரம்! சுத்த அறிவே, பரிபூரண அறிவே ஞானம்!
நம் ஒளி பெருகப் பெருக ஞானக்கனல் பெருகி உள்ளொளி பெருகும் போது
அறிவு கொஞ்சங் கொஞ்சமாக துலங்கும். உள்ளொளி பெருக அறிவு பெருகும்!

ஞாயிறு, 12 ஜூலை, 2015

இறைவனை அடைய இறைவனே காட்டிய வழி சும்மா இரு!

சும்மா இருக்க உணர்த்தினார் ஆதிகுரு ஸ்ரீதட்சிணாமூர்த்தி

சும்மா இரு என்று அருணகிரிநாதருக்கு உணர்த்தினார் முருகப்பெருமான்

சும்மா இருக்கவே திருவருட் பிரகாஷ வள்ளலாரும் கூறுகிறார்!


இறைவனை அடைய இறைவனே காட்டிய வழி சும்மா இரு!

அதை விடுத்து கண்ட கண்ட சாமியார்கள் கூறும் யோகா செய்து கேட்டு போகாதீர்! மெய் ஞானம் தேடுவோர் சும்மா இருப்பார்!
எந்த யோக சாதனையும்   தேவை இல்லை! சும்மா இருக்கும் தவம் செய்வோர், ஞான சாதனையாளர்கள்  உலக விவகாரங்களை விட்டு ஒதுங்கியே இருப்பார்! 

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

வெள்ளி, 10 ஜூலை, 2015

மெய்ப்பொருள் உபதேசம்

குருவினை க்  கொண்டருட் சத்தி முன் கூட்டிப்
பெருமல நீங்கி பிறவாமை சுத்தமே  - திருமூலர்

 மனிதன் ஞான சற்குருவை கொண்டு, அவர் பாதம் பணிந்து மெய்ப்பொருள் உபதேசம் பெற்று, ஞான சாதனை செய்து வரவர தன் ஞானக்கனலை எழுப்புவான்! எழும்பும் ஞானக்கனல் பெருகி உள்பெருகி ஊடுருவி தாய் அருளைப்பெருவான்! உலக அன்னை வாலையருள் பெற்றவன்
மும்மலங்கள் நீங்கும்! பெருமலங்கள் நீங்கினால்  இறப்பு இல்லை!  இறக்காதவன் எப்படி மீண்டும் பிறப்பான்! குருவைப்பெற்றவன்  பெறுவான் பிறவா மை! அந்த ஆத்மாவே பரிசுத்தமானது!  பவித்திரமானது! எல்லா அழுக்கும் நீங்கினால் சுத்தம் தானே!

ஞாயிறு, 5 ஜூலை, 2015

உருவ வழிபாடு தேவையா? - வள்ளலார்


உருவ வழிபாடு தேவையா? அல்லது வேண்டமா?
வள்ளலார் இராமலிங்கஅடிகள் வரலாறு
சன்மார்க்க தேசிகன் ஊரன் அடிகள் உருவ வழிபாட்டைப் பற்றிப் பிரம்ம சமாஜத்தாருடன் வாது தேதி 16-01-1897.

* உருவவழிபாடு அறவே கூடாதென்பர் பிரம சமாஜத்தார்.

*உருவ வழிபாடும் வேண்டியதே என்பவர் வள்ளற் பெருமான்.
*உருவ வழிபாடும் அருவ வழிபாடும் அவ்வப்பக்குவர்க்கு உரியவை
*உருவ வழிபாடு முதற்படி,அருவவழிபாடு முடிவான படி,
*அருவவழிபாடு எல்லாராலும் செய்ய இயலாது,
*அதற்குப் பெரும் பக்குவம் வேண்டும்,
*உருவ வழிபாடு எல்லாராலும் செய்ய இயலும்,
*உருவ வழிபாட்டிலிருந்தே அருவ வழிபாட்டு நிலைக்குரிய பக்குவத்தைப் பெறுதல் சாமானியர்க்குரிய சாதனமுறை,
*ஆதலால் உருவவழிபாடு இகழ்ச்சிக்குரியதன்று என்பது
வள்ளற்பெருமானின் கொள்கை.
*சாதாரண தரத்தவர்கள் செய்ய வேண்டிய தியானத்தைப் பற்றி உபதேசிக்கும்போது தியானஞ் செய்ய வேண்டுமானால் ஏதாவது ஓர் உருவத்தைத் தியானிக்க வேண்டும்.
*நிஷ்களமா யிருக்கப்படாது.
*உருவமாக இருக்க வேண்டும்.
அருவமாகத் தியானிக்கப்படாது.
*பின் உருவம் கரைந்து அருவமாகும் எனப் பெருமான்
உபதேசித் திருக்கன்றனர்.
*இவ்வாறு அருவ வழிபாடு,உருவ வழிபாடு,

இரண்டையும் ஆதரிக்கும்
வள்ளற்பெருமானுக்கு,
பிரம்ம சமாஜத்தார் உருவ வழிபாட்டை வன்மையாகக் கண்டித்துப் பொதுமக்களிடம் தம் கருத்தைப் பரப்புவது உடன்பாடில்லை.

இவைகளைப் பற்றி மேலும் விரிவாக

வள்ளலார் இராமலிங்க அடிகள் வரலாறு புத்தகத்தில் உள்ளது

*பக்கம் 294ம்முதல் 303ம் பக்கம் வரை உள்ளது.

ஊரன் அடிகளுக்கு தங்கஜோதி ஞான சபையின் நன்றிகள்

Popular Posts