வியாழன், 12 பிப்ரவரி, 2015

மெய்த்தவம் ஒன்றுண்டு



மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே.

விளக்கம்:

மனிதன் மேற்கொள்ள தகுந்த உயர்ந்த முடிந்த முடிபான சிறந்த மெய்த்தவம் ஒன்றுண்டு! மெய்தாள் ஒன்றுண்டு! மெய்ந்நெறி ஒன்றுண்டு!

இறைவனையே அவன் திருவடியையே சேர வேண்டும் என்ற வண்ணம் தொழுது அழுது தவம் செய்வார்க்கே ஞானம் – மோட்சம் கிட்டும்!

மெய்த்தவம் - உண்மையான தவம் எது என்றால் மனித உடலே மெய்! இந்த மெய்யிலே இருக்கும், இறைவன் இருக்கும் பொருள் – மெய்பொருள் கண்மணியே! அதனுள் ஒளியே! இதை சற்குரு மூலம் அறிந்து உணர்ந்து செய்வதே மெய்த்தவம்!

மெய்த்தாள் - மெய்யிலே – உடலிலே உள்ள தாள் திருவடி ஒன்றுண்டு! அதுவே நம் உயிர் நிலை! அதுவே இரண்டாக பிரிந்து இரு கண்ணாக உள்ளது!

மெய்நெறி - மெய்த்தாள் அறிந்து மெய்த்தவம் செய்ய மனிதன் மெய்நெறி வழி நடக்க வேண்டியது அவசியம்! உடம்பே ஆலயம் அதனுள் பரம்பொருள் ஜீவனாக கோயில் கொண்டுள்ளான் என்பதை உணர்ந்து உடம்பாகிய ஆலயத்தில் உயிர் குடி கொண்ட கோயிலை – கருவறையை – மூலஸ்தானத்தை அடைய மூலவர் அருள்பெற நல்லொழுக்க நற்பண்பினராக வாழ்வது மிக மிக அவசியம்! அதுவே மெய்நெறி இதையெல்லாம் மொத்தம் 25 நூற்களில் எழுதி விட்டேன்! ஆயிரம் அன்பர்களுக்கு மேல் உபதேசம் தீட்சை வழங்கியும் வழி நடத்தியாயிற்று? வாருங்கள் காண விரும்பினால்? வேண்டுங்கள் பெற விரும்பினால்! கன்னி’ய’குமரிக்கு வரம் பெற வாலையருள் பெற வருக! வருக!

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

சும்மா இருக்க குரு வழிகாட்ட வேண்டும் !

உயிர் அறியாது ஒடுங்குவது தூக்கம் ! உயிரை அறிந்து
ஆதாரத்தில் ஒடுக்குவது சமாதி ! சாதாரண மக்களுக்கு
தூக்கம் ஒரு வரப்பிரசாதம் ! ஒய்வு கிடைக்கிறது .
ஓய்வு என்றால் என்ன ? சும்மா இருப்பது தானே ?!
சும்மா இருப்பதுதான் ஞானம் ! அறியாமல் சும்மா
இருந்தால் ஓய்வு ! அறிந்து உணர்ந்து சும்மா இருந்தால்
ஞானம் கிட்டும் ! அறிந்து உணர்ந்து சும்மா இருக்க
குரு வழிகாட்ட வேண்டும் !


உயிரை அறிந்து ஆதாரங்களில் ஒடுங்கி விடாமல்
உணர்வோடு சும்மா இருப்பதுவே ஞானநிலை!
மோனநிலை! " சமாதி பழக்கம் பழக்கமல்ல,
சகஜ பழக்கமே பழக்கம் " என வள்ளலார் கூறுகிறார் .
சமாதியில் மூழ்குவது பெரிதல்ல , உயிர் அனுபவம்
உணர்ந்து பெற்ற பேரின்ப நிலையிலேயே சகஜமாக
எப்போதும் இருப்பதுவே சிறப்பு என்கிறார் .

உயிர் தூக்கத்தில் ஒடுங்குகிறது ! மரணத்தில்
உடலைவிட்டு பிரிந்து விடுகிறது ! மயக்கத்தில்
தடுமாறுகிறது ! தடுமாறாமல் ஒடுங்காமல் , பிரியாமல்
உயிரை அதன் தன்மையில் பெருக்கி அதாவது ஒளியான
உயிரை ஊசிமுனை அளவு ஒளியான உயிரை
உடல் முழுவதும் பரவும் அளவு பேரொளியாக
செய்து இந்த உடலிலேயே உயிரை நிலை பெறச்
செய்வதுமே ஞானம் ! உயிர் தன்மையை உடல்
பெற்று உடலும் ஒளிர்ந்து மிளிர்வதே ஞானம் !
ஊன உடலே ஒளி உடலாக பெறுவதே ஞானம் !

Popular Posts