வியாழன், 18 ஏப்ரல், 2013

சிவம் - சக்தி




யாமொன் றிரண்டு நீயென்றா-----பாடல் 120
(இங்கித மாலை - திருஅருட்பா)

யாம் ஒன்று நீ இரண்டு என இறைவன் கூறினாராம். எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே! அவர் எங்கும் நிறைந்துள்ளார்! நம் உடலிலும் உயிராக இருப்பவர் அவரே! அவர் நம் சிரநடுவிலும், தலைமத்தி உள்ளிலும் இரு இடங்களில் துலங்குகிறார்.

அதாவது நம்தலை உச்சி ஒரு இடம்! உச்சிக்கு கீழே அண்ணாவுக்கு மேல - அக்னிகலை ஒரு இடம்! ஆக இரண்டு இடம்.

கீழே சிற்சபை மேலே பொற்சபை. சிற்சபைக்கு போக இருவாசல் இருகண்கள்!

யாம் ஒன்று நீ இரண்டு என்பது இவ்வாறே! இரண்டைபிடித்தால் தான் ஒன்றை அடைய முடியும்! சிவம் வேறு சக்தி வேறாக இருக்கும் நாம் சிவசக்தியாக வேணும்!

சூரிய சந்திரனாக விளங்கும் நம் இரு கண்ணும் உள்ளே அக்னி கலையில் ஒன்றாக வேண்டும். நாம் இரண்டாக இருக்க காரணம் நம்மும்மலங்களே! தவம் செய்து மும்மலங்களை எரித்து விட்டால் ஒன்றாகி விடலாம்! ஒன்றான பின்பே ஒன்றலாம் ஒன்றான இறைவனுடன்! ஒன்றேசெய்! நன்றேசெய்! இன்றேசெய்!

வடலூர் மாத பூசம் நாட்கள் 2013-14

Popular Posts