புதன், 21 டிசம்பர், 2011

குரு வார்த்தை!


“மண்ணிற்சில் வானவரை போற்றும்
மதத்தோற் பலருண்டு நானவரைச் சேராமல் நாட்டு”

(திருவருட்பா, மூன்றாம் திருமுறை, சிவநேச வெண்பா – பாடல் 99)

இன்றைய உலகின் சீர்கேட்டை வள்ளல்பெருமான் அன்றே உரைத்திட்டோர்!? பூமியில் தோன்றி இறைவனப்போற்றி கூறிய ஒரு சில பெரியவர்களை போற்றி அவர் பெயரால் புதுப்புது மதங்களை உருவாக்கி விட்டனர் அறிவிலிகள்! மகான்கள் பெரியவர்கள் உபதேசித்த ஞானத்தை மறந்துவிட்டனர்! மறைத்தும் விட்டனர்! அப்பெரியவர்கள் இறைவனை அடையத்தான் வழிகாட்டினார்!? மடையர்கள் அவர்களை கடவுளாக்கி புதுப்புது மதங்களை உண்டாக்கி விட்டனர்! இறைவனை அடையவழி காட்டினால், இறைவனை விட்டுவிட்டு வழிகாட்டிகளை கடவுளாக்கி விட்டனர்! இன்றைய உலகின் ஒரே பிரச்சினை இது தானே! மதவாதம்தானே! எல்லா மகான்களும் இறைவனைத்தானே காண, அடைய வழிகாட்டினார்! ஏன் உணர மாட்டேன் என்கிறீர்கள்!?

பள்ளிகூடத்தில் பாடம் நடத்திய வாத்தியார் சொன்னவற்றை புரிந்து சிரத்தையெடுத்து படிப்பவன்தான் உருப்புடுவான்! வெற்றி பெறுவான்! பாடம் சொல்லிகொடுத்த வாத்தியாரை புகழ்வதால் ஒரு பயனுமில்லை! இதை புரிந்து கொண்டால் சரிதான் உருப்படலாம்!

உங்களை பிடித்திருக்கின்ற பேய்கள் சாதிப்பேய்! மதப்பேய்! இனப்பேய்! மொழிபேய்! இந்த பேய்களை ஒட ஒட விரட்டுங்கள்!! உலகிலுள்ள அனைவரும் இறைவன் படைப்பே! நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே! உலக மக்கள் அனைவரும் சகோதர சகோதரிகளே! நாமனைவருக்கும், இறைவன் ஒருவரே!

நீ யார் எனில் மனிதன்! உன்குலம் யாதெனில் மனிதகுலம்! உன் சாதியென்றால் ஒளிசாதி! இறைவன் பேரொளியல்லவா? பரமாத்மாதானே! நாம் அதினின்று தோன்றிய சிற்றொளி தானே! சீவாத்மா தானே! அப்படியானால் நமது சாதி ஒளி சாதிதானே! உன் மதம் எது என்றால்? என்னிடம் ஆணவமான மதம் உள்ளது அதையும் நாம் விட்டொழிக்க வேண்டும்! மதமே இல்லாத மனிதாபிமானம் உள்ள, ஆன்மநேயம் உள்ள அன்புள்ள மனம் மட்டுமெ உள்ளது எனக்கூற வேண்டும்! வாழ்ந்து காட்ட வேண்டும்! அன்பே கடவுள்! என் மதம் அன்பு மதம்!

நான் – ஆன்மா – உயிர் – சீவன் என்பதை ஒளியாக கண்ணில் மணியில் துலங்குகிறேன் என்பதை அறிய வேண்டும்! உணர வேண்டும்!

கருணையே வடிவான இறைவன் நம்மை அன்போடு அரவணைத்துகொள்வார்! இப்பாரில் நானிருக்கும் வரை இறைவா உன் புகழ்பாட வேண்டும்! கேட்கவேண்டும்! அருள்க!

சற்குரு சிவசெல்வராஜ்


----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.




-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

2 கருத்துகள்:

  1. வணக்கம் அய்யா. தங்களது வருகை என்னை பெருமை படுத்துகிறது! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. மிகச் சரியான தங்கள் பார்வையில் என்றும் வெளிச்சம் வர வாழ்த்துக்கள்...
    நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று பார்ப்பதில்லை சாதி...

    பதிலளிநீக்கு

Popular Posts